Published : 14 Aug 2014 07:47 PM
Last Updated : 14 Aug 2014 07:47 PM

மதச்சார்பின்மையில் உறுதி காத்திட வேண்டும்: குடியரசுத் தலைவர் உரை

ஜனநாயகச் சமதர்மம், மதநல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தியாவில், மதச்சார்பின்மை என்ற கட்டிடத்தை உறுதியாகக் காத்து நிற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மேலும், வன்முறையும், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகமும் மன்னிக்க முடியாதவை என்றும், நாட்டில் அமைதி இல்லாவிடில் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது என்றும் அவர் பேசினார்.

68-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு வடிவம்:

"நமது நாட்டின் 67-வது சுதந்திரன விழா தினத்தன்று எனது அன்பான வாழ்த்துக்களை உங்களுக்கும் உலககெங்கும் உள்ள இந்தியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். முப்படையினருக்கும், துணைப்படையினருக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையச் சார்ந்தவர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் உற்சாகம்!

சுதந்திரம் என்பது கொண்டாட்டம்; சுதந்திரம் என்பது சவாலும் கூட. 68 ஆம் ஆண்டு சுதந்திரத்தில் நாம் தேர்தலை அமைதியாக நடத்தி தலைவர்களை தேர்ந்தெடுத்ததன் மூலம் நமது தனிபட்ட மற்றும் கூட்டு உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த தேர்தலில் 58 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு இந்த ஆண்டு இந்த தேர்தலில் 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நமது ஜனநாயகத்தின் உற்சாகத்தை காட்டுகிறது. கொள்கைகள், நடைமுறைகள், ஆட்சி முறைகள் ஆகியவற்றின் சீர்திருத்தங்களை கொண்டு வரும் சவால்களுக்கான வாய்ப்பை இந்த சாதனை அளித்துள்ளது. இந்த சவால்களை நிறைவேற்றுவதால் மக்களின் மகத்தான ஆசைகளை தெளிவான நோக்கத்தோடும், அர்ப்பணிபோடும், நேர்மையாகவும், விரைவாகவும், நிர்வாக திறனோடும் நிறைவேற்ற முடியும்.

ஆக்கப்பூர்வ சிந்தனை தேவை

மந்தமான உள்ளங்கள் அமைப்பை அசைவற்றதாக மாற்றிவிடும். அது வளர்ச்சிக்கு தடையாகிவிடும். இந்தியாவின் ஆட்சி முறைக்கு ஆக்கபூர்வமான சிந்தனை தேவை. அது வளர்ச்சி பாதையை வேகமாக்கி சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும். பல்வேறு பிரிவினை வாதங்களை மீறி மக்களை முதன்மையாக கொண்டு நாட்டை உயர்த்தி பிடிக்க வேண்டும்.

உருமாற்றுதலும் மறுசீரமைப்பதும் அவசியம்

ஜனநாயகத்தில் நாட்டு மக்களின் நலனுக்காக பொருளாதாரம் மற்றும் சமூக வளங்களை திறமையாகவும் பயன் உள்ளதாகவும் மேலாண்மை செய்வதே நல்லாட்சியின் அதிகாரம் ஆகும். இந்த அதிகாரத்தை அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் அரசு நிறுவனங்களை கொண்டு பயன்படுத்த வேண்டும். காலப்போக்கில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களினால் பல சிதைவுகள் ஏற்பட்டு சில நிறுவனங்களை செயலற்றதாக்கிவிடுகிறது. ஒரு நிறுவனம் எதிர்பார்த்ததை போல் செயல்படாதபோது, அது இன்னும் மேலே செல்ல முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. சில நிறுவனங்கள் அவசியமானதாக உள்ள போதிலும் பயனுள்ள அரசாக மக்களுக்கு சேவை செய்ய உண்மையான தீர்வு காண ஏற்கெனவே உள்ள நிறுவனங்களை உருமாற்றுதலும் மறுசீரமைப்பதும் அவசியமாகும்.

சமுதாய அமைப்புகளின் பங்கு

சட்டத்தின் ஆட்சி, முடிவெடுப்பதில் அனைவரின் பங்கு வெளிப்படைத்தன்மை, மறுமொழி பகிர்தல், பொறுப்புணர்வு, அனைவருக்கும் உரிமை ஆகியவற்றை சார்ந்தே நல்லாட்சி அமைகிறது. இது அரசியல் நடைமுறையில் சமுதாய அமைப்புகளின் பங்கின் முக்கியதுவத்தை காட்டுகிறது. அது ஜனநாயகம் எனும் நிறுவனத்தின் இளைஞர்களின் உறுதியான ஈடுபாட்டை அழைக்கிறது. அது மக்களுக்கு விரைவாக நீதியை வழங்குவதில் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. ஊடகங்கள் நீதி நெறியுடனும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

பொறுப்பான மேலாண்மை

நமது நாட்டின் அளவு, பன்முகத்தண்மை மற்றும் சிக்கல்கள் காரணமாக கலச்சாரத்துக்கு ஏற்ற அரசாங்க முறை தேவை. அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்த அதிகார பயன்பாடு மற்றும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். மாநிலத்திற்கும் குடிமகனுக்கும் இடையே ஆன உறவை வளர்க்கும் வகையில் அமைய வேண்டும். பொறுப்பான மேலாண்மை இதை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் வீட்டுக்கும் கொண்டு செல்லும்.

வறுமை ஒழிப்பே சவால்

வறுமை ஒழிப்பே நமது காலத்தின் பெறு சவாலாகும். வறுமை அதிகரப்பில் இருந்து வறுமை ஒழிப்பு என்பதில் நமது திட்டத்தின் குறக்கோளாக உள்ளது. பொருட்களில் மட்டும் இந்த வித்தியாசம் இல்லை: அதிகரிப்பு என்பது செயல்முறை; ஒழிப்பு என்பது நேரம் சார்ந்த குறிக்கோளாகும். கடந்த 60 ஆண்டுகளாக வறுமை விகிதம் 60 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்திற்க்கு கீழ் குறைந்துள்ளது. அப்படி இருந்தும் நமது மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்கு வறுமை கோட்டுக்கு கீழாகவே உள்ளது.

வறுமை என்பது வெறும் புள்ளிவிபரம் அல்ல. வறுமைக்கென்று ஒரு முகம் உள்ளது அதன் தழும்பு குழந்தையின் முகத்தில் வரும் போது அது தாங்க முடியாத ஒரு நிலைக்கு கொண்டு செல்கிறது. வாழ்கையின் அத்யாவசிய தேவையான உணவு, தங்கும் இடம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய வற்றை அடுத்த தலைமுறை பார்க்கும் வகையிலோ அல்லது மறுக்க படுவதையோ வறுமையில் உள்ளவர்கள் காத்திருக்க மாட்டார்கள் காத்திருக்கவும் வேண்டாம். பொருளாதார மேம்பாட்டின் பயனை வருமையிலும் வருமையுற்றவர்களுக்கு சென்றடையவேண்டும்.

பொருளாதார வளர்ச்சி

கடந்த 10 ஆண்டுகளாக நமது பொருளாதார வளர்ச்சி வீதம் ஒர் ஆண்டுக்கு 7.6 சதவீதமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சி வீதம் ஐந்து சதவீதத்திற்கு கீழ் இருந்தாலும் சுறுசுறுப்பும், நம்பிக்கையும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மீண்டும் எழுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நமது வெளியுறவு பிரிவு வலுவடைந்துள்ளது. நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தீர்வுக்கான ஆரம்பித்துள்ளது. தீடீர் விலை உயர்வுகளை தாக்கு பிடிக்கமுடியாமல் மிதமாக மாறிவருகிறது. ஆனாலும், உணவு பொருட்களின் விலை முக்கிய கவலையாக உள்ளது. கடந்த ஆண்டு, உணவு தானிய உற்பத்தியின் பதிவு வேளாண்மைத் துறையின் 4.7 சதவீத வளர்ச்சிக்கு உதவியது. வேலைவாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளின் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி துறை மீண்டு வரும் தருணத்தில் உள்ளது. சமமான வளர்ச்சிக்கு தேவையான வளங்களை கொண்டுவருவதற்கான பொருளாதாரத்தின் வளர்ச்சி 7ல் இருந்து 8 சதவீதம் வரை வளர இந்த மேடை தயாராக உள்ளது.

வளர்ச்சியின் அடிப்படை பொருளாதாரம் ஆகும். கல்வி, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியும். அதனால் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வி அளிப்பது முக்கிய பொறுப்பாக கொள்ள வேண்டும். பணிரெண்டாம் ஐந்தாண்டு திட்டம் முடியும் போது எழுத்தறிவு 80% ஆக உயர்வதற்கு வாய்ப்புள்ளது, என்றால் இந்த எழுத்தறிவு வழியாக நல்ல குடிமக்களையும், வெற்றிகரமான பணியாளர்களையும் உருவாக்க முடிந்ததா என்பது தான் கேள்வி.

தூய்மையான இந்தியா

சுற்றுச்சூழல் தான் நம்முடைய எண்ணங்களை உருவாக்குகிறது. ஒருவன் என்ன நினைக்கிறானோ அதுவே செயலாகிறது என்று சொல்கிறது ஒரு சமஸ்கிருதச் சொல். மாசு இல்லாத சுற்றுச்சூழல், குற்றமற்ற, நேர்மையான எண்ணங்களுக்கு வித்திடுகிறது என்பதாகும். நேர்மை, சுயமரியாதையின் வெளிப்பாடு.

கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணி மெகஸ்தனீஸ், கிறிஸ்து பிறந்த பின் ஐந்தாம் நூற்றாண்டில் வந்த ஃபாஹின், ஏழாம் நூற்றாண்டில் வந்த ஹியுன்சாங் ஆகியோர், நாட்டில் நிலவிய திறமையான நிர்வாகமுறை, திட்டமிட்ட குடியேற்றம், சிறப்பான நகர்ப்புற கட்டமைப்பு குறித்து பாராட்டி எழுதி உள்ளனர்.

இப்போது நம்மிடம் என்ன தவறு? நம்முடைய சுற்றுச்சூழலை மாசில்லாமல் உருவாக்க முடியாதா? மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளின் போது உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, 2019 -ஆம் ஆண்டிற்குள் தூய்மையான இந்தியாவை உருவாகக்க வேண்டும். என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது பாராட்டிற்கு உரியது. இந்தியர் ஒவ்வொருவரும் இந்த வேண்டுகோளை தேசிய கொள்கையாக மதித்து செயல்பட்டால் மட்டுமே தூய்மையான இந்தியாவை உருவாக்குவது சாத்தியமாகும். ஒவ்வொரு சாலையும், ஒவ்வொரு வழியும், ஒவ்வொரு அலுவலகமும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு குடிசையும், ஒவ்வொரு நதியும், ஒவ்வொரு அருவியும், காற்றின் ஒவ்வொரு துகளும் சுத்தமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். நாம் சிறிதளவு கவனம் செலுத்தி உழைக்க வேண்டும். இயற்கையை நாம் பேணிக்காத்தல், இயற்கை எப்போதும் நம்மைப் பேணிக்காத்துக் கொண்டே இருக்கும்.

வன்முறையும் துரோகமும் மன்னிக முடியாதது!

பாரத நாடு பழம் பெரும் நாடாக இருந்தாலும், நம்முடைய நாடு நவீன கனவுகளைக் கொண்ட நவீன நாடு. வன்முறையும், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகமும் மன்னிக்க முடியாதவை. நாட்டில் அமைதி இல்லாவிடில் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியாது என்பது இந்தியர்களுக்குத் தெரியும்.

சத்திரபதி சிவாஜி, மொகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எழுதிய கடிதத்தை இத்தருணத்தில் நினைவுகூற விரும்புகிறேன். ஒளரங்கசீப் ஜியா என்ற வரியை விதித்தார். அவருக்கு சிவாஜி ஒரு கடிதம் எழுதினார். ஷாஜஹான், ஜஹாங்கிர், அக்பர், ஆகியோரும் இந்த வரியை மக்களிடம் வசூலித்தனர். ஆனால் அவர்கள் தங்கள் இதயத்தில் மதவெறிக்கு இடம் கொடுக்கவில்லை.

மனிதர்களில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். சத்திரபதி சிவாஜியால் 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த மடல் ஒரு செய்தியைத் தாங்கி உள்ளது. இன்றைய நாளில் நம்முடைய நடத்தையை வழிநடத்தும் சாசனமாகத் திகழ்கிறது.

சர்வதேச சூழ்நிலைகளின் விளைவாக நம்முடைய மண்டலத்திலும் அதைச் சுற்றிலும் அபாயகரமான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், சிவாஜி நமக்கு வழங்கி இருக்கும் செய்திகளை மறக்க முடியாது.

மதச்சார்பின்மை

ஜனநாயகச் சமதர்மம், மதநல்லிணக்கம் இவற்றின் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது. சமயச்சார்பின்மை என்ற கட்டிடத்தைநாம் உறுதியாகக் காத்து நிற்க வேண்டும்.

நம்முடைய பாதுகாப்பு கொள்கைகளும் அயல்நாட்டுக் கொள்கைகளும் உருக்கைப்போன்ற வலிமையும், பட்டுத் துணியைப்போன்ற மென்மையும் கொண்டவை.

எனது கவலை

நம்முடைய அரசியல் அமைப்புச்சட்டம். நம்முடைய நாட்டின் தொன்மையான மதிப்பை எதிரொலிக்கிறது. நம் நாட்டின் மாபெரும் மதிப்பு, நம்முடைய அஜாக்கிரதையால் வீணாகிறதோ என்ற எண்ணம் என்னை கவலைப்பட வைக்கிறது. நாம் சுதந்திரமாகச் செயல்படும் நிலை அதிகரித்து வருகிறது.

மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன? சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கிறது. நம்முடைய ஜனநாயகம் வெறும் சத்தமாக மட்டுமே மாறுகிறதா? நம்முடைய சிந்தனைத் திறனை நாம் இழந்து வருகிறோமா? நம்முடைய பழம்பெருமையும் வாய்ந்த ஜனநாயத்தைப் பேணிக் காக்க வேண்டிய நேரம் அல்லவா இது?

நாடாளுமன்றம் என்பது ஆரோக்கியமான விவாதங்களையும், மிகச் சிறந்த சட்டங்களையும் உருவாக்கும் இடம் அல்லவா? நம்முடைய நீதிமன்றங்கள், நீதி வழங்கும் ஆலயங்கள் அல்லவா? இதற்கு அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என்பது உறுதி.

வறுமையோடு போராட்டம்

நம் நாடு 68 ஆண்டுகளுக்கு பிறகும் இளமையான நாடு. ஆற்றல், பெருமை, சமத்துவம், ஆகியவற்றுக்கு 21-ஆம் நூற்றாண்டில் உரிமை கொண்டாடும் நாடு. மக்களை வாட்டும் வறுமையுடன் போராடி வெற்றி காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுமையான உழைப்பின் மூலமே வெற்றி காண முடியும்

செயல்பட இதுவே தருணம்!

ஜெய்ஹிந்த்."

இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x