Published : 19 Jul 2017 10:24 AM
Last Updated : 19 Jul 2017 10:24 AM

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 117 நாட்களில் 82 பேரை சந்தித்த சசிகலா - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

சிறை விதிமுறைகளை மீறி 117 நாட்களில் 82பார்வையாளர்களை சசிகலா சந்தித்த விவகாரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாபல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு இருப்பது வீடியோ ஆதாரம் மூலமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூருவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, சிறையில் சசிகலாவை சந்தித்த நபர்களின் பட்டியலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டார்.

அதற்கு சிறையின் அப்போதைய தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அளித்த பதிலில், ‘சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட 16.2.2017 முதல் 12.6.2017 வரை 117 நாட்களில் 32 முறை பார்வை யாளர்களை சந்தித்துள்ளார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, டிடிவி தினகரன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தமிழக எம்எல்ஏக்கள் உட்பட 82 பேர் சசிகலாவைச் சந்தித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

காற்றில் பறந்த விதிகள்

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கூறு கையில், 'சிறை விதிகளின்படி தண்டனைக் கைதி 15 நாட் களுக்கு ஒரு முறைதான் பார்வை யாளர்களை சந்திக்க முடியும். அதன்படி பார்த்தால் சசிகலா 117 நாட்களில் 8 முறை மட்டுமே பார்வையாளர்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் சசிகலா 32 முறை பார்வையாளர்களை சந்தித்திருக்கிறார். 30-க்கும் குறை வானபார்வையாளர்களை சந்தித் திருக்க வேண்டிய அவர் 82 பேரை பார்த்திருக்கிறார்.

நேரம் முடிந்த பிறகும்...

அதிலும் குறிப்பாக இளவரசி யின் மகன் விவேக்கை 8 முறையும், உறவினரும் வழக்கறிஞருமான அசோகனை 7 முறையும், டிடிவி தினகரனை 5 முறையும் சந்தித் துள்ளார். அதிலும் அலுவலக நேரம் தாண்டி, இரவு 7.30 மணிக்கு மூர்த்தி ராவ் என்பவரை சந்தித்து பேசியுள்ளார். இது அப்பட்டமான விதிமீறல். சிறை விதிகளை காற்றில் பறக்கவிட்ட சசிகலா மீதும், அதிகாரிகள் மீதும் கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x