Published : 01 Mar 2016 10:51 AM
Last Updated : 01 Mar 2016 10:51 AM

புகையிலை பொருட்களுக்கு 10 முதல் 15 % உற்பத்தி வரி

பீடியை தவிர்த்து புகையிலை பொருட்கள் மீது 10 முதல் 15 சதவீதம் உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் உட்பட புகையிலை பொருட்களின் விலை உயரும்.

பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டதும், நாட்டின் மிகப் பெரிய சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசியின் பங்குகள் 3.13 சதவீதம் வரை சரிவை கண்டன. கடந்த 4 ஆண்டுகளாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் 98 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், சிகரெட் நிறுவனங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது 5-வது ஆண்டாக 10 முதல் 15 சதவீதம் வரை சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டிருப்பது ஐடிசி போன்ற பெரிய நிறுவனங்களின் லாபத்தை பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x