Published : 12 Jul 2016 10:03 AM
Last Updated : 12 Jul 2016 10:03 AM

தெலங்கானாவில் பசுமை புரட்சி: 46 கோடி மரக்கன்றுகளை நட முடிவு

தெலங்கானாவில் நிலத்தடி நீர் வளத்தை பெருக்கவும், பசுமை யான இயற்கை சூழலை உரு வாக்கவும் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 46 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தெலங்கானா அரசு சார்பில் அம்மாநிலத்தில் ‘ஹரித ஹாரம்’ எனும் பெயரில் பசுமை புரட்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 2-ம் கட்டமாக இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நல்கொண்டா மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

அதன்படி மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழாவில் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், திரையுலக பிரமுகர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாண வியர் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்று வருகின்ற னர். அடுத்த 15 நாட்கள் வரை மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா வரையிலான 165 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹைதராபாத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஆளுநர் நரசிம்மன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நடிகர் சிரஞ்சீவி, நடிகை அமலா ஆகியோர் பங் கேற்றனர்.

பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது பகுதி களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x