Published : 10 Oct 2015 08:26 AM
Last Updated : 10 Oct 2015 08:26 AM

தீபாவளி பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள் ளனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப் படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர் களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்த மான, சுகாதாரமான சூழலில் வளர் வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் மதன் லோக்கூர், யு.யு.லலித் அடங்கிய சமூக நீதி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உலகிலேயே அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி இருந்து வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரி ழந்து வருகின்றனர். மாசு சீர் கேட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு ரூ.387 கோடி நிதி ஒதுக்குகிறது. ஆனால், இதில் 87 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. காற்று மாசடைதலை தடுக்க தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும். பருவநிலை பயிர் கழிவுகளை எரிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை 16-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x