Last Updated : 28 Apr, 2015 03:10 PM

 

Published : 28 Apr 2015 03:10 PM
Last Updated : 28 Apr 2015 03:10 PM

ஜெ. வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமனம்

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: அரசு வழக்கறிஞராக மீண்டும் பி.வி. ஆச்சார்யா நியமனம் - 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா மீண்டும் நியமிக் கப்பட்டார். இதற்கான அரசா ணையை கர்நாடக அரசு நேற்று வெளியிட்டதை தொடர்ந்து, 18 பக்க எழுத்துப்பூர்வ வாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்றே தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத் துக்குவிப்பு வழக்கு மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடை பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட் டுள்ளது. இவ்வழக்கில் அரசு வழக் கறிஞராக ஆஜரான பவானிசிங்கின் நியமனம் சட்ட விரோதமானது என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், “பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது சட்டப்படி செல் லாது. அவர் சமர்ப்பித்த‌ வாதங்கள் அனைத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். திமுக தரப்பும் கர்நாடக அரசும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை அடிப்படையாக கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும். கர்நாடக அரசு இவ்வழக்கிற்கு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண் டும். புதிய அரசு வழக்கறிஞர் 50 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப் பூர்வ வாதத்தை செவ்வாய்க்கிழமை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தது.

மீண்டும் ஆச்சார்யா

இதையடுத்து கர்நாடக அரசு நேற்று அவசரமாக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச் சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது உதவி வழக்கறிஞராக சந்தேஷ் சவுட்டா நியமிக்கப்பட் டுள்ளார். இந்த நியமனத்தை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின்படி கர்நாடக அரசு மேற்கொண்டுள் ளது'' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் மூத்த வழக்கறிஞர் களில் ஒருவரான பி.வி. ஆச்சார்யா சுமார் 60 ஆண்டுகளாக வழக்கறி ஞராக பணியாற்றியுள்ளார். கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக 5 முறையும் பார் கவுன்சில் தலைவராகவும் இந்திய சட்ட ஆணைய உறுப்பினராகவும் இருந்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்த அவர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றவர்.

கடந்த 2005-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டபோது அரசு வழக்கறி ஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட் டார். உச்ச நீதிமன்ற ஆணைப்படி வழக்கை தினமும் நடத்தாமல் ஜெயலலிதா காலதாமதம் செய்த போது அவர் கடும் ஆட்சேபம் செய்தார். மேலும் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு,சாட்சிகள் விசா ரணை, குறுக்கு விசாரணை, பிறழ் சாட்சியங்கள் விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை என விரைந்து பணியாற்றி சொத்துக் குவிப்பு வழக்கை இறுதிக்கட்டத் துக்கு நகர்த்தினார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் 2012-ம் ஆண்டு அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகினார். ஜெயலலிதா வழக்கில் தான் சந்தித்த சோதனைகள் குறித்து ஆச்சார்யா தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதிகபட்ச தண்டனை வழங்கவும்

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் புதிய அரசு வழக் கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப் படுவது தொடர்பான உத்தரவு வெளியானதையடுத்து, அரசு தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தயாரிக்கும் பணியில் ஆச்சார்யாவும் அவரது உதவியாளர் சந்தேஷ் சவுட்டாவும் இறங்கினர். சுமார் 12 மணி நேர ஆய்வுக்கு பின்னர் 18 பக்க வாதத்தை அவர்கள் தயாரித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பாட்டீலிடம் ஆச்சார்யா தனது தரப்பு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். “ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான அரசு தரப்பின் குற்றச்சாட்டு சந் தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக் கப்பட்டுள்ளது. பொது ஊழியர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, கூட்டுச்சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட அனைத்தையும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆவணங்களும் நிரூபித்துள்ளன.

எனவே இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார். ஊழல் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும்'' என வாதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x