Last Updated : 26 May, 2015 08:21 AM

 

Published : 26 May 2015 08:21 AM
Last Updated : 26 May 2015 08:21 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: தாடி வளர்த்த வழக்கறிஞர்களும், ஓடி உழைத்த நீதிமன்ற ஊழியர்களும்

ஜெயலலிதா கடந்த 19 ஆண்டு களாக சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் நடத்த வில்லை. வழக்கில் இணைக்கப் பட்டிருந்த தனியார் நிறுவனங் களின் சொத்துகளை விடுவிக்கக் கோரும் வழக்கு, அரசு வழக்கறி ஞர் பவானிசிங் நியமனம் தொடர் பான வழக்கு ஆகியவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். இதனால் நீதிமன்றத் தில் எப்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் கூட்டம் அலைமோதும்.

தினமும் 500 கிலோ எடையுள்ள ஆவணங்களை கச்சிதமான பைகளில் அடுக்கி, 50-க்கும் மேற் பட்ட வழக்கறிஞர்கள் சுமந்து வருவார்கள்.

சேலத்தில் உள்ள‌ பிரபலமான வழக்கறிஞர் குடும்பத்தை சேர்ந்த குலசேகரன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில்,கிரிமினல் வழக்கு களில் அனுபவம் வாய்ந்தவர். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்திலின் நண்பர் என்பதால் 2013-ல் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களுக்காக களமிறக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன் னிலையில் வழக்கு வேகமெடுத்த போது, சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கோடிக்கணக் கான சொத்துகளை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.

மூல வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்ததால், இதை விசாரிக்காமலேயே பால கிருஷ்ணா ஓய்வு பெற்றார். அடுத்து வந்த நீதிபதி குன்ஹாவும் இதே பாணியை பின்பற்றிய போது, “ தனியார் நிறுவனங்களின் மனுக்கள் மீது தீர்ப்பு அளித்த பிறகு சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும்''என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வேகமாக விசாரித்த குன்ஹா, `வழக்கை தாமதப்படுத்த முயற்சிக் கும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதனிடையே குலசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997-ல் தனியார் நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தூசு தட்டினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 2014-ல், ''மூல வழக்கை முடிக்கும் முன் பாகவே தனியார் நிறுவனங்களின் வழக்கை முடிக்க வேண்டும்'' என வழிகாட்டுதல் வழங்கியது. எனவே விசாரணையை முடுக்கி விட்ட குன்ஹா,' தனியார் நிறுவனங் களின் சொத்துகள் அனைத்தும் ஜெயல‌லிதா வாங்கியது' என தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து 6 நிறுவனங் களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. தனியார் நிறுவனங்களுக்காக குலசேகரனே வாதிட்டார்.

2009-ம் ஆண்டு ஜெயலலிதா வழக்கில் நவனீதகிருஷ்ணன் ஆஜராகிக் கொண்டிருந்த போது அவருக்கு ஜூனியராக பெரம்ப லூரை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர் செல்வம் பெங்களூரு வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதா தரப்பில் ஆஜரான பி.குமார், நாகேஸ்வர ராவ் உள்ளிட்டவர்களுக்கும் ஜூனியராக செயல்பட்டார். இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படி யெடுத்து, முறையாக‌ கோப்புகள் தயாரிக்கும் பணியை முழுமையாக பார்த்துக்கொண்டார்.

பெங்களூருவாசியாகவே மாறி விட்ட பன்னீர் செல்வத்தை திருமணம் செய்துகொள்ள பலரும் வலியுறுத்தினர். ஜெயலலிதா வழக் கில் இருந்து விடுதலை ஆகாமல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என 5 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லி வந்தார். இந்நிலை யில் தற்போது விடுதலையாகி யுள்ளதால் பன்னீர் செல்வத்துக்கு பெண் பார்க்கும் படலம் வேகமாக நடந்துவருகிறது.

ஜெயலலிதா பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த நேரத்தில் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட அமைச் சர்கள் தாடி வளர்த்தனர். அதே போல இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் செல்வக்குமார், திவாகர் இருவ‌ரும், ஜெயலலிதா விடுதலையாகும் வரை தாடி வளர்த்தனர்.

பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தலைமை நீதிமன்ற அதிகாரியான‌ சுந்தர ராஜ் பிச்ச முத்து, 2003-ல் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப் பட்ட போது இவ்வழக்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழ், கன்னடம், ஆங்கிலம் மூன்று மொழியும் எழுத, படிக்கத் தெரியும். பல ஆயிரக் கணக்கான ஆவணங்களை மொழிபெயர்த்ததில் தொடங்கி, நீதிபதி கேட்கும்போது எடுத்து தருவது வரை அனைத்தையும் கவனித்து கொண்டார்.

பிச்சமுத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னுரை முதல் முடிவுரை வரை அறிந்தவர் என்பதால் அதிமுக தரப்பும், திமுக தரப்பும் பிச்சமுத்துவை வட்டமடித்துக் கொண்டே இருப்பார்கள். அனை வரிடமும் நட்பாக பழகும் பிச்ச முத்து நீதிபதிக்கு நெருக்கமானவர் என்பதால் உளவுத்துறை அதிகாரி கள் 24 மணி நேரமும் கண்காணிப் பார்கள். 2006-ம் ஆண்டு பிச்சமுத்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கால நேரம் பார்க்காமல் விடு முறை நாட்களிலும் பணியாற்றி னார். கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பிச்சமுத்து ஜெயலலிதாவின் வழக்கில் இருந்து விடுபட்டாலும், குன்ஹாவுக்கு மலை போல வந்து குவிந்த கடிதங்களை படித்து காட்டுவதற்காக நீதிமன்றத்துக்கு சில நாட்கள் வந்தார்.

கடந்த ஜனவரியில் மேல்முறை யீட்டு விசாரணை தொடங்கிய போது நீதிபதி குமாரசாமி, பதிவாள ரிடம் பேசி பிச்சமுத்துவை மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து, தன்னுடன் வைத்து கொண்டார். தீர்ப்பு எழுதப்பட்ட போதும் நீதிபதி யுடனே இருந்தார் பிச்சமுத்து.

தீர்ப்பு இறுதி செய்யப்பட்ட நாட்களில் தொடர்பு எல்லைக்கு அப்பால் பறந்தார். தீர்ப்பு வெளி யான மறுநாளே பெங்களூருவில் உள்ள பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிச்சமுத்து வுக்கு வெற்றிகரமாக‌ முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந் துள்ளது.

(இன்னும் வருவார்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x