Published : 10 Apr 2016 11:06 AM
Last Updated : 10 Apr 2016 11:06 AM

கொல்லம் கோயில் வெடிவிபத்து: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறல்

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் தேவி கோயிலில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திணறி வருகிறது.

ஏகப்பட்ட ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்களில் காயமடைந்தோர் கொண்டு வரப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் பலருக்கும் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. 4 கூடுதல் அறுவை சிகிச்சை அறைகளைத் தவிர மூட்டு, எலும்பு சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அறைகளும் திறக்கப்பட்டும் சுமார் 100 காயமடைந்தோரை விரைவில் கவனிக்க முடியாமல் மருத்துவர்களும், துணை மருத்துவ ஊழியர்களும் திணறி வருகின்றனர்.

கடுமையான தீக்காயங்களுடன் ஏராளமானோர் வரும் அதே வேளையில், கோயிலில் தீயிலிருந்து தப்பிக்க மக்கள் ஓடும்போது நெரிசலில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டவர்களும் அங்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.

காயமடைந்தோரின் நிலை அபாயக் கட்டத்தில் உள்ளது, பலரும் கை கால்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரில் 50 சதவீத மக்கள் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x