Published : 20 May 2014 08:28 PM
Last Updated : 20 May 2014 08:28 PM

குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி

நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமரவிருக்கும் நரேந்திர மோடி புதன்கிழமை குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். 12 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக இருப்பவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு குஜராத் எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுகிறார் மோடி. தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனர் கமலா பெனிவலிடம் அளிக்கும் முன்னர் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார் அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். அதன் பிறகு அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.

புதிய குஜராத் முதல்வர் வியாழக்கிழமை பதவியேற்கிறார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x