Published : 23 Apr 2017 11:02 AM
Last Updated : 23 Apr 2017 11:02 AM

குஜராத்தில் நரேந்திர மோடி டீ விற்ற ரயில் நிலையம் ரூ.8 கோடியில் மாற்றி அமைப்பு

குஜராத் மாநி்லம் மெஹ்சானா மாவட்டத்தில் வாத்நகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று தெரிவித்தார்.

மோடி பிறந்த இடமும் வாத்நகர் ஆகும். சிறுவயதில் தனது தந்தையுடன் சேர்ந்து வாத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதை 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அவ்வப்போது குறிப்பிட்டு வந்தார் மோடி.

கான்டினென்டல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் கட்டியுள்ள கன் டெய்னர் டிப்போவை திறந்துவைக்க மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று சாச்னா கிராமம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:

பயணிகள் ரயில்களுக்கு எப்படி புறப்பாடு, வருகைக்கான கால அட்டவணை அமலில் உள்ளதோ அதே முறை சரக்கு ரயில்களுக்கும் நடைமுறைப்படுத்துவது பற்றி ரயில்வே அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. கால அட்டவணை நிர்ணயித்து 3 அல்லது 4 சரக்கு ரயில்களை இயக்கி சோதித்து பார்க்க தொடங்கியுள்ளோம். இவ்வாறு சின்ஹா கூறினார்.

இதனிடையே ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் பற்றி அகம தாபாத் கோட்ட ரயில்வே மேலாளர் தினேஷ் குமார் கூறியதாவது: வாத்நகரம் மற்றும் மெஹ்சானா மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு மொத் தம் ரூ. 100 கோடி செலவாகும். வாத்நகர், மொதேரா, படான் ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்து வதற்கான இந்த ரூ. 100 கோடி திட்டத்தில் வாத்நகர் ரயில் நிலைய மேம்பாடும் சேர்க்கப் பட்டுள்ளது.

இப்போதைக்கு ரயில்வே நிலைய மேம்பாட்டுக்காக மாநில சுற்றுலாத் துறையிடம் மத்திய சுற்றுலா அமைச்சம் ரூ. 8 கோடி வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x