Published : 08 Aug 2014 08:44 AM
Last Updated : 08 Aug 2014 08:44 AM

கல்பாக்கம் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும்: அமைச்சர் தகவல்

சென்னையை அடுத்த கல்பாக் கத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் தோரியம் அணு உலை அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மாநிலங்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதில‌ ளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

தோரியம் அணு உலை கட்டு மானத்தின் பெரும்பகுதி முடி வடைந்துவிட்டது. இது அடுத்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும்.

இந்தியாவில் முதன்முறை யாக, உள்நாட்டிலேயே தோரியம் அணு உலை தயாராகி வருகிறது. உலகிலேயே தோரியம் அதிகமாக உள்ள மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிக மாக உள்ள நாட்டில், அதிகரித்து வரும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம் நாட்டில் உள்ள வளங்களை அதிக அளவு பயன்படுத்த வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் அதிகமாக உள்ள தோரியத்தைக் கொண்டு அணு மின்சாரம் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தோரியத்தைப் பயன்படுத்தி அணு மின்சாரம் தயாரிக்க தோரி யத்துடன் யுரேனியமோ அல்லது புளூட்டோனியமோ கலந்து பயன்படுத்த வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் குறைந்த அளவே யுரேனியம் இருக்கிறது. எனினும், ஈனுலைகளில் இருந்து பெறப்படும் புளூட்டோனியத்தை தோரியத்துடன் சேர்த்து நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும்.

அணு மின்சாரம் தயாரிக்கும் போது பசுமை இல்ல வாயுக்கள் எதுவும் தோன்றாது. எனவே, இந்த அணு மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு இயைந்த சுத்தமான மின்சாரம் ஆகும்.

தமிழகம், கேரளம், ஒடிஸா மற்றும் நாட்டின் இதர சில இடங் களில் தோரியம், கடற்கரை மணலில் உள்ள மோனாசைட் வடிவத்தில் காணக் கிடைக்கின் றன.

சட்டத்திற்குப் புறம்பாக தோரியம் எடுக்கப்படுவதைத் தடுக்க விண்வெளித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் துறைமுகங்களில் கண் காணிப்பை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன, என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x