Last Updated : 21 May, 2015 08:15 AM

 

Published : 21 May 2015 08:15 AM
Last Updated : 21 May 2015 08:15 AM

ஓராண்டை நிறைவு செய்கிறது பாஜக அரசு: அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடா?

மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெறு கிறது. இந்த வேளையில் மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறு பாடுகள் நிலவுவது தெரிய வந் துள்ளது. இது பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறு கின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி, கடந்த ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பதவியேற்றார். பாஜக அரசு பதவியேற்று வரும் 26-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்நிலையில் மோடி அமைச்சரவையில் உள்ள சிலர் மற்றும் மாநில முதல்வர்கள் சிலர், மத்திய அரசு மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படை யாகவே தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். மேனகா எழுதிய கடிதத்தில், ‘‘ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் நலன், கர்ப்பிணி களுக்கு ஊட்டச்சத்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து போன்றவை தொடர் பாக பல முக்கிய திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலை யில், எனது அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்ததன் மூலம் இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது வீழ்ச்சிக்கு வழிவகுத்திடும் சூழ்நிலையை உருவாக்கும். இதை சொல்வதற்கு எனக்கு அச்சமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் 29-ம் தேதி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதி உள்ளார். அதிலும், தனது மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டதாகக் குறை கூறியுள்ளார். ‘‘மத்திய அரசின் புதிய கொள்கைகளால், ஒடிசா மாநிலத்துக்கு ரூ.2,100 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்து விட்டது. அளவுக்கதிக மாக நிதி குறைக்கப்பட்டதால், மாநிலத்தில் சமூக பொருளாதார திட்டங்கள் முடங்கி விடும்’’என்று கூறியுள்ளார். கடிதத்தில் மேனகா, நவீன் பட்நாயக் ஆகியோர் கூறி யுள்ள விவரங்களை ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ளது.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் இதே குற்றச்சாட்டை கூறி யுள்ளார். 14-வது நிதி கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவ தால், மாநிலங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள் ளது. ஆனால், நிதி கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்துவதன் மூலம் மாநிலங்களின் வரிவருவாய் பங்கு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆனால், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைத்ததன் மூலம், பிஹார் போன்ற சில மாநிலங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு குறைந்து விட்டதாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிதியமைச்சர் ஜேட்லி அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, பதில் கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x