Last Updated : 23 Aug, 2014 08:52 AM

 

Published : 23 Aug 2014 08:52 AM
Last Updated : 23 Aug 2014 08:52 AM

இளம்பெண்ணைக் கடத்தி பலாத்காரம் அரசியல்வாதியின் மகன் உட்பட மூவர் கைது

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு காரில் 'லிஃப்ட்' கொடுப்பதாகக் கூறி கடத்தி, பண்ணை வீட்டில் வைத்து பலாத்காரம் செய்ததாக 3 பேரை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ராம்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுபம் அகர்வால் கூறியதாவது:

பிஹார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்,பெங்களூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.இவர் பெங்களூரில் உள்ள விஜயநகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார்.கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு வேலை முடிந்து, விஜய நகர் செல்வதற்காக மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

எனவே பேருந்து நிலையத் துக்கு வெளியே வந்து காத்திருந் தார்.அப்போது அங்கு காரில் வந்த 3 பேர், அந்த பெண்ணிடம் 'லிப்ட்' கொடுப்பதாக கூறியுள்ளனர்.இதனை நம்பி அந்த பெண் காரில் ஏறியுள்ளார்.

அவர்கள் விஜயநகருக்கு செல்லாமல் பெங்களூரின் புறநகரில் உள்ள தாவரக் கெரேவிற்கு சென்றுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், சத்தமிட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதால் மயங்கி யுள்ளார். அவரை அங்குள்ள‌ பண்ணை வீட்டிற்கு தூக்கி சென்று, அடித்து சித்ரவதை செய் துள்ளனர்.

அதன்பிறகு குடி போதை யில் இளம்பெண்ணை 3 பேரும் பலாத்காரம் செய் துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலையில் அங்கிருந்து தப்பிய இளம்பெண்,பெங்களூர் வட்டச்சாலையை அடைந்துள் ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர், அவரை மீட்டு, தாவரக்கெரே காவல் நிலையத் தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீஸார், கர்நாடக பால் கூட்டமைப்பின் இயக்குநரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிர்வாகியுமான‌ நரசிம்ம மூர்த்தியின் ம‌கன் அருண் கவுடா(24), அவரது நண்பர் கெம்பா நரசிம்மா(36),பண்ணை வீட்டின் பாதுகாவலர் மஹாதேவா(40) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் மருத்துவப் பரி சோதனை நடத்தப்பட்டு, ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x