Published : 05 Jul 2014 10:37 AM
Last Updated : 05 Jul 2014 10:37 AM

இராக்கில் விடுவிக்கப்பட்ட நர்ஸ்கள் கொச்சி வந்தடைந்தனர்: பிரதமர் மோடிக்கு உம்மன் சாண்டி நன்றி

இராக்கில் கிளர்ச்சிப்படையினரால் விடுவிக்கப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் கூடியிருந்த உறவினர்கள் நர்ஸ்களை கண்ணீர் மல்க வரவேற்றனர். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் விமான நிலையம் வந்து நர்ஸ்களை மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அவர்களுடன் இராக்கில் வெவ்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் 137 பேரும் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

இராக்கின் எர்பில் விமான நிலையத்தில் இருந்து 183 இந்தியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று காலை 8.43 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் வந்தடைந்தது.

அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு கிளம்பும் விமானம், காலை 11.55 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் மதியம் 2.25 மணிக்கு ஹைதராபாத்திற்கும், இறுதியாக மாலை 5.40-க்கு டெல்லி வந்தடையும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

பிரதமருக்கு உம்மன் சாண்டி நன்றி:

இராக்கில் சிக்கிய இந்திய நர்ஸ்களை பத்திரமாக மீட்கப்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி நன்றி தெரிவித்தார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "மத்திய அரசுக்கும், குறிப்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியுறவு அமைச்சகமும், இராக்கில் உள்ள இந்திய தூதரகமும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு நர்ஸ்களை மீட்டுள்ளது" என்றார்.

இராக்கில் விடுவிக்கப்பட்ட 46 நர்ஸ்கள் விபரம்

1. பிரசீதகுமாரி

2. ஏஞ்சலீனா தொட்டுன்கட்

3. லெஸிமா ஜியோர்ஸ் மோனிஷா

4. லிட்டி ஜாய்

5.ஷாலினி டி.எஸ்

6. ஜிஜி ராஜன்

7. ஜென்சி ஜேம்ஸ்

8.ஸ்மிதா மோல்

9. சாந்தி பிரபுழா ஜான்

10. சபிதாமோல்

11. டின்சி தாமஸ்

12. நீனு ஜோஸ்

13. சுனிதா கோபி

14. சின்சி மதாய்

15. வித்யா கருகாதரயில் விஸ்வாம்பரன்

16. ஷெரீன் வர்கீஸ்

17. ஷின்மோல் ஜோசப்

18. சுமி ஜோஸ்

19. டீனு ஜான்

20. சவுமியா பேபி

21. சீலியம்மாள் ஜார்ஜ்

22. ஜெயலட்சுமி

23. ஷேனு மரியா அலெக்ஸ்

24. ஆன்சி ஜோசப்

25. ஸ்ருதி

26. ரேணு பாலகிருஷ்ணன்

27. சாண்ட்ரா செபாஸ்டின்

28. ஜாஸ்மி பிரான்சிஸ்

29. டின்மோல் ஜோசப்

30. டிண்டு ஜாப்

31. சந்தியா ஜோஸ்

32. சினுமோல் ஜோசப்

33. சலீஜா ஜோசெப்

34. லினு பேபி

35. சையோனா தாமஸ்

36. நித்யா மோல்

37. சினமூல் சாக்கோ

38. வின்சி செபாஸ்டின்

39. ரம்யா ஜோஸ்

40. வீனா ஜோசப்

41. சோனா ஜோசப்

42. சுபின். சி. ஆண்டனி

43. சிபி ஜோஸ்

44. மெரீனா ஜோஸ்

45. நீனா ஜோசப்

46. ஸ்ருதி சசிகுமார்.

இராக்கில் இந்திய நர்ஸ்கள் விடுக்கப்படுவது தொடர்பான முந்தையச் செய்தித் தொகுப்பு:

கேரள முதல்வர் வெளியிட்ட தகவல்:

இராக்கில் கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் விடுவிக்கப்பட்டதாக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

மேலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்புவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மோசுல் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது குர்திஸ்தான் தலைநகரான எர்பில். இராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினர் போரில் ஈடுபட்டுள்ளனர். திக்ரித், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், இராக்கின் திக்ரித் நகரில் இருந்து இந்திய செவிலியர்கள் 46 பேர் கடத்தப்பட்டு மோசுல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லியில் முகாமிட்டார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நர்ஸ்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த 46 நர்ஸ்களும் விடுவிக்கப்பட்ட தகவலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x