Published : 08 Oct 2014 09:26 AM
Last Updated : 08 Oct 2014 09:26 AM

இன்று சந்திர கிரகணம்: சென்னையிலும் பார்க்கலாம்

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி முழு சந்திர கிரகணம் இன்று மாலை நிகழவுள்ளது.

இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் இரவு 7.05 மணி வரை நீடிக்கும். முழுமையான கிரகணம் மாலை 4.24 மணி முதல் 4.54 மணி வரை நிகழும் என்று மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பராஞ்பே கூறியுள்ளார். சென்னையில் மாலை 5.54 மணிக்கு கிரகணத்தை காணலாம். இதை 11 நிமிடங்கள் வரை மட்டுமே பார்க்க முடியும்.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.

சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட உள்ளது. காலை 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு இரவு 10.30 மணியிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x