Last Updated : 07 Jul, 2016 06:09 PM

 

Published : 07 Jul 2016 06:09 PM
Last Updated : 07 Jul 2016 06:09 PM

இந்தியக் கல்வியில் புதுமை இல்லை: மாணவர்களின் எதிர்ப்புக் குரலை வரவேற்கும் மத்திய அமைச்சர் ஜவடேகர்

கல்வியில் புதுமை இல்லை, பள்ளிகளில் மாணவர்கள் கேள்வி கேட்க முடியாத சூழ்நிலைகள் உள்ளன, ஏற்கெனவே இருப்பதைத் தக்க வைக்கும் போக்குக்கு எதிராக மாணவர்கள் செயல்படுவது அவசியம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனந்தபஜார் பத்திரிகைக் குழு ஏற்பாடு செய்த ‘இன்ஃபோகாம் 2016’ நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர் கூறியதாவது:

சாராம்சமாக, கிளர்ச்சியின் விளைவே புதுமை. ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளைக் கொள்கைகளை தக்கவைப்பதற்கு எதிராக செயல்படவில்லையெனில் அதனை எதிர்க்கவில்லையெனில் எந்த புதுமையையும் கொண்டு வர முடியாது. மோடி அரசு கல்வியில் புதுமை புகுத்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியக் கல்வித்துறையில் புதுமை இல்லாததற்குக் காரணம் என்ன? நாம் கேள்விகள் கேட்க அனுமதிக்கவில்லை. கேள்விகேட்கும் திறனை நாம் வளர்த்தெடுக்க விரும்பவில்லை. பள்ளியில் மாணவர்கள் கேள்வி கேட்டால் நாம் உட்கார் என்று தடை போடுகிறோ. இது இப்படியே தொடர்வது கூடாது. கேள்வி கேட்கும் திறனை நாம் வளர்த்தெடுப்பது அவசியம். குழந்தைகள் கேள்வி கேட்க வேண்டும்.

குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதித்தால் புதுமை தானாகவே விளையும். ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த வளர்ச்சி இயற்கையை எதிர்மறையாக பாதிக்காது, மாறாக அனைவருக்கும் முன்னேற்றம் என்பதை அடிப்படையாகக் கொண்டது இதற்கு புதுமை புகுவது அவசியம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி ஊடகத்துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புதிய கருத்துகளின் விளைவே மாற்றம். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம், ஆனால் நேர்மறையாகச் சிந்திக்க வெண்டும் புதுமை குறித்து நம் பார்வைகளைக் கூர்மையாக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் ஜவடேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x