Published : 05 Nov 2016 10:09 AM
Last Updated : 05 Nov 2016 10:09 AM

ஆன்லைன் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டு கள் மற்றும் தங்கு அறைகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ் தானம் அறிவித்துள்ளது.

திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று நடந்த பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியின்போது தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பேசிய தாவது:

சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு திட்டங் களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு ஆகிய வற்றுக்காக ஆதார் அட்டை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காண்பிக்கலாம்.

சென்னை பக்தரின் ஆலோ சனைப்படி ஆன்லைன் முன்பதிவின் போது பக்தர்களின் புகைப்படம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.  வெங்க டேஸ்வரா பக்தி சேனலில் குழந்தைகளுக்காக விரைவில் அனிமேஷன் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகவுள்ளது. முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அவர்களது உதவிக்காக பேட்டரி கார்கள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வெள்ளி வாசல் முதல் தங்க வாசல் வரை ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆலோசித்து வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, விசேஷ பூஜை, அஷ்டதள பாத பத்மராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், பிரம் மோற்சவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக ஆன்லைனில் நேற்று ஒரு லட்சத்து 147 டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x