Last Updated : 24 Jul, 2014 12:25 PM

 

Published : 24 Jul 2014 12:25 PM
Last Updated : 24 Jul 2014 12:25 PM

நாளைய உலகம்: வீழும் விண்டோஸ் 8

குழந்தைகளை மீட்க

இந்தியாவில் வருடத்துக்கு 65,000 குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வுகள் கூறுகிறது. வீட்டார் மீது ஏற்படும் கோபம், மனநிலை பாதிப்பு, போன்ற காரணங்களால் காணா மல் போகிறவர்கள் ஒருபுறம் என்றால் கடத்தல் சம்பவங்களால் மாயமாகிறவர்களும் நிறைய உண்டு. இப்படி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் புதிதாக ஒரு வெப்சைட்டை உரு வாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். இதில் நாடு முழுவதும் காணமால் போகும் குழந்தைகளை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். இதன் மூலம் காணாமல் போன குழந்தை எந்த மூலையில் இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

வீழும் விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ‘விண்டோஸ் 8’ இயங்கு தளத்திற்கு தற்போது வரவேற்பு குறைந்துள்ளதாம். வளர்ந்து வரும் நாடுகளின் பயனர்கள், ‘விண்டோஸ் 8’-ஐ யூசர் - பிரண்ட்லி யாக கருதாதது தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த இயங்குதளம் வெளியாகி 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலை யில், ஜூன் மாதம் வரை அதன் நிகர சந்தை பங்கு 6.29 சதவீதமாகவே உள்ளது. ஆனால் இதற்கு முன்பு வெளியான விண்டோஸ் 7 இயங்குதளம், வெளியான 20 மாதங்களில் 23 சதவீதம் நிகர சந்தை பங்கினை

பெற்றது. பெரும்பாலான பயனர்கள் ‘விண்டோஸ் 8’-ஐ புறக் கணித்தாலும் சில அப்டேட் களுடன் வெளியான ‘விண்டோஸ் 8.1’-ஐ ஓரளவு விரும்புவது குறிப்பிடத்தக்கது.

மழைகாலத்தில்...

மழைக்காலத்தை பயன் படுத்தும் வகையில் சந்தையில் பல வாட்டர் ப்ரூஃப் தொழில் நுட்ப சாதனங்கள் வரிசை கட்டி நிற் கின்றன. குறிப்பாக சோனி, பான சோனிக், போன்ற நிறுவனங்கள் வாக் மேன் கருவிகளை சந்தைப் படுத்த ஆரம்பித்துள்ளன. இதே நேரத்தில் வாட்டர் ரெசிஸ் டண்ட் சாதனங்களான ‘சாம்சங் ஜி5’ ஸ்மார்ட்போனுக்கும், ‘சோனி எக்ஸ்பீரியா z5’ டேப்லட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று அந்நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x