Published : 27 Jan 2015 12:17 PM
Last Updated : 27 Jan 2015 12:17 PM

உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அரை மணி நேரம் முடக்கம்

பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) உலக அளவில் சுமார் அரை மணி நேரம் முடங்கியது.

இந்திய நேரப்படி முற்பகல் 11.50 மணியளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை பாதித்தது. இதையடுத்து, மற்றொரு முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர்.

ஃபேஸ்புக் தளத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், 'மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்' என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.

ஃபேஸ்புக் தளம் முடங்கிய அடுத்த நொடிகளில், அதுகுறித்த தகவலை ட்விட்டரில் இணையவாசிகள் பகிர்ந்தவண்ணம் இருந்தனர். #facebookdown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டிங் டாப்பிக் ஆனது.

உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, ஆப்-களிலும், மொபைலிலும் இந்த முடக்க பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, இந்திய நேரப்படி மதியம் 12.35 மணியளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.

மென்பொருள் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே வலைதளங்கள் முடங்கியதாக >ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது. இதில், ஹேக்கர்களின் அத்துமீறல் ஏதும் இல்லை என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x