Published : 03 Mar 2015 05:32 PM
Last Updated : 03 Mar 2015 05:32 PM

கிடைத்ததில் திருப்தி கொள்க: புதிய மன்னன்

மனச்சோர் என்பது எப்படி ஏற்படுகிறது? தொடர் தோல்வி, வெற்றி பெறுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் தான் வெற்றி பெறவில்லையே என்று ஏங்குவது, தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது, அந்த ஆசையை நன்கு வளர்த்து கொள்வது, மனக் கற்பனையையும் யதார்த்த வாழ்க்கையும் ஒப்பிட்டு பார்க்காமல் கற்பனையாக நினைத்ததை நிஜத்திலும் நம்புவது கிரவுண்ட் ரியாலிட்டி உணராமல் இருப்பது, அதிக கனவுகளில் மிதப்பது, நடைமுறைக்கு ஒத்து வராத விஷயங்களை எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருப்பது...

இவை எல்லாம் கடைசியில் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். கற்பனையில் டூ வீலரில் உச்சகட்ட வேகத்தில் செல்வது போலே நினைப்பது, அதையே செயல்படுத்த நினைத்து, செயல்படுத்தும் பொழுது இவர்களுக்கு மட்டும் அல்லாமல், தெருவில் போவற்கும் பாதிப்பு, வேகமாக வண்டி ஓட்ட வீடியோ கேமில்தான் சாத்தியம்; நிஜத்தில் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்.

டேக் இட் ஈஸி பாலிஸி என்று இல்லாமல் இழந்ததையே நினைத்து நினைத்து வாடி மனச்சோர்வு அடைவது. இதற்குதான் மத ரீதியாக நம்ம தலையில் என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும் நீ வருத்த படாதே என்று சொல்வார்கள்.

>யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது மனம்? கட்டுரையாளர் ஜி.ராமானுஜம் பல வார்த்தைகளைக் கொண்டு இதை விவரித்து சொல்லி இருக்கிறார். எதிலும் மிக மிக தீவரமாக இருக்க கூடாது. அனைத்து விஷயங்கள்ளிலும் நடுநிலையோடு இருக்கப் பழக வேண்டும்.

ஒரு நடிகரோ அல்லது ஒரு நிறுவனமோ, ஒரு கட்சியோ, ஒரு மதமோ எப்போதும் சரியாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது. வேறு மாதிரியும் இருக்க வாய்ப்பு என்று உணர்ந்து கொள்ள வேண்டும். முழுவதுமாக 100% கட்சி, தலைவர், நிறுவனம், நடிகர், தன் மதம் என்று நம்பிவிட்டால் வேறு தகவல்கள் வெளிவரும்பொழுது, அந்த அதிர்ச்சியை தாங்காது துவண்டு விடுகின்றனர்.

எப்பொழுதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மனதைத் தயார் படுத்தி வைத்து இருந்து வந்தால் மனம் சமாதனம் அடையும். இந்த நாடு தான் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெரும் என்று திடமாக நம்பி பேசி வந்தால், கடைசியில் அவர்களே காசு வாங்கி கொண்டு தோற்று விடுவார்கள். நிச்சயம் திறமை வாய்ந்த இந்த அணி வெற்றி பெரும் நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாகி விட வாய்ப்பு. எப்பொழுதும் யதார்த்தத்தை உணர்ந்து எதுவும் நடக்க வாய்ப்பு என்று இருக்க வேண்டும். கிடைத்ததில் திருப்தி அடையே வேண்டும் மனசோர்வு வராது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x