Published : 04 Mar 2015 03:24 PM
Last Updated : 04 Mar 2015 03:24 PM

கழிப்பறைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும்: கந்தையா

செய்தி:>கார்ப்பரேட் நிறுவனங்கள், பணக்காரர்களுக்காக அல்ல; ஏழைகளுக்காகவே ஆட்சி நடத்துகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் கந்தையா கருத்து:

கழிப்பறை என்பது நாட்டின் அத்தியாவசிய தேவை. பொது இடங்களில் தேவையான அளவுக்கு சுகாதாரமான கழிப்பிடங்களை அமைப்பது அரசின் கடமை. இதை ஏழைகளுக்கு மட்டும் என சொல்வது தவறு.

அதேபோல வங்கி கணக்கு துவங்கிவிட்டாலே ஏழைகள் வாழ்வில் வளர்ச்சி வந்துவிடுமா? வங்கி கணக்கும் ஓர் அத்தியாவசிய சேவைதான். இதையும் சாதனையாக சொல்கிறார்! வங்கிகளில் வராக்கடன் பல கோடிகள் வைத்திருப்பது யார்?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தேர்தல் நிதி வசூல் செய்த தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தது. இந்த நிதி சாமானிய மக்கள் கொடுத்ததா? எல்லாம் பெரு முதலாளிகள் தங்களுக்கு அரசு சாதகமாக செயல்பட முன்கூட்டியே கொடுத்த முன் பணம்தான் அது.

நிலம் கையகபடுத்துவது முழுக்க முழுக்க வஞ்சகமான செயல். நாட்டின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர் என்றால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களின் உயிர்நாடியான விவசாய வளர்ச்சிக்கு பாடுபடட்டும்.

கிராமங்களும் நகரங்களோடு இணைந்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே நாட்டை உயர்த்திவிடாது. மோடி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x