Published : 28 Feb 2015 09:44 AM
Last Updated : 28 Feb 2015 09:44 AM

வாசிப்பின் மீது வாஞ்சை

கால ஓட்டத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புத்தகங்களை வாசிப்பது வாசகருக்கு மட்டுமல்ல; படைப்பாளருக்கும் அவசியமான ஒன்றே. வாசிப்பென்பது அனைவருக்கும் பொதுவென்றாலும், புத்தக வாசிப்பின் வழியே ஒரு வாசகர் அடைந்த அனுபவம் அவருக்குள்ளேயே தங்கிவிடுகிறது. ஒரு படைப்பாளியோ தனக்குள் அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசகருக்கே அனுபவக் கடத்தியாய்த் திருப்பியனுப்பும் வேலையைச் செய்துவிடுகிறார்.

அப்படியான எழுத்துக்களின் பதிவே உதயை மு.வீரையனின் ‘படித்ததும் பிடித்ததும்’. தான் படித்த புத்தகங்களில் மிகவும் பிடித்த புத்தகங்கள்பற்றி வாசகர்களும் அறிந்துகொள்ளும் நோக்கில், ‘தமிழ்த் தென்றல்’ இதழில் உதயை மு.வீரையன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கவிதை, கட்டுரை, சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று பல்வேறு வகைகளில் 48 புத்தகங்களைப் பற்றி எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், வாசகருக்கு அந்த நூல்களை வாஞ்சையுடன் அறிமுகம் செய்துவைக்கின்றன. நூல்களைத் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருப்பதே நூலாசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றிதானே!

படித்ததும் பிடித்ததும்
உதயை மு.வீரையன்
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108.
தொடர்புக்கு: 044 2595 4528
பக்கம்: 256 விலை: ரூ.125

- மு. முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x