Published : 17 Feb 2018 09:02 AM
Last Updated : 17 Feb 2018 09:02 AM

பிறமொழி நூலறிமுகம்: வடகிழக்கில் பாஜகவின் திட்டம்

வடகிழக்கில் பாஜகவின் திட்டம்

ந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் 2014 வெற்றிக்குப் பிறகு காலூன்ற முயற்சிக்கத் துவங்கிய பாஜக, முதலில் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை மொத்தமாக விலைக்கு வாங்கியது. அதன் பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம் அசாம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததன் பின்னணியில் பாஜகவின் திட்டம் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதையும் அசாம் மாநில அரசியலில் நிலவிய இடைவெளிகளை எப்படி அது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது என்பதை விளக்கும் வகையில், இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பில் செயலாற்றிவரும் ரஜத் சேத்தி மற்றும் ஷுப்ரஸ்தா ஆகிய இருவரும் எழுதியுள்ள நூல் இது. தற்போது பாஜகவின் வட கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பாளரான ராம் மாதவ் முன்னுரையுடன் வந்துள்ள இந்நூல், இந்திய விடுதலைக்குப் பிறகு, ஒட்டாமல் உறவாடாமல் இருந்துவரும் வடகிழக்குப் பகுதி மக்களைக் கவர்ந்திழுக்கத் தேவையான திட்டங்களை பாஜக எப்படி படிப்படியாக வகுத்து, அவற்றைச் செயல்படுத்திவருகிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. வடகிழக்குப் பகுதி குறித்த ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x