Published : 30 Sep 2014 11:55 AM
Last Updated : 30 Sep 2014 11:55 AM

உங்களைக் காத்துக் கொள்ள...

# வெளியில் செல்லும்போது குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வது நல்லது.

# வீட்டுக்குள் நுழைந்ததும் கை கால்களைக் கழுவ வேண்டியது அவசியம்.

# வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டுக் கழுவி எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

# ஐந்து நிமிடங்களுக்காவது நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

# அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உண்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

# திறந்து வைக்கப்பட்ட, ஈக்கள் மொய்த்த, சாலையோர உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

# சமைத்த உணவு வகைகளையும், குடிநீர்ப் பாத்திரங்களையும் மூடி பாதுகாக்கவும்.

# இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.

# கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் மறைக்கிற ஆடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.

# வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

# தெருக்களைச் சுத்தப்படுத்திப் பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்கள் வராது.

# எலி காய்ச்சலைத் தவிர்க்க, செருப்பு அணிந்துதான் தெருக்களில் நடக்க வேண்டும்.

# சத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். இவற்றின் மூலம் மழைக்கால நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x