Last Updated : 23 Sep, 2014 01:31 PM

 

Published : 23 Sep 2014 01:31 PM
Last Updated : 23 Sep 2014 01:31 PM

டீ குடிக்கலாமா?- எச்சரிக்கும் ஆய்வு

காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக டானிக்காக தேநீரை நம்புகிறோம். நிறம், சுவை, திடம், சூடு போன்ற எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, ரசித்துச் சுவைத்துக் குடிக்கிறோம்.

அந்தத் தேநீரில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தேநீரில் பூச்சிக்கொல்லி எப்படி வரும் என்று நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், சமீபத்திய ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது.

புதிய ஆய்வு

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் சர்வதேச அமைப்பான ‘கிரீன் பீஸ்' சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காகத் தேநீர்த் தூள் விற்கும் 8 நிறுவனங்களின் 49 தயாரிப்புகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டாடா குளோபல் பீவரேஜஸ் லிமிடெட், வாக் பக்ரி டீ, குட்ரிக் டீ, ட்வினிங்க்ஸ், கோல்டன் டிப்ஸ், கோச்சா, கிர்னார் ஆகிய பிரபலத் தயாரிப்புகள் அடக்கம்.

சுமார் ஓராண்டு காலம் நடந்த இந்த ஆய்வில், நமது நாட்டில் 1989-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியான டி.டி.டி. இருந்தது தெரிய வந்துள்ளது. இது 67 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இது போன்ற வேதிப்பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை.

என்ன வழி?

இதுகுறித்து கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த நேஹா சைகால் கூறுகையில், "தேநீர் நமது தேசத்தின் பெருமை. சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அந்த மதிப்பைக் குறைத்துவிடக்கூடாது.

தேநீர்த் தூள் தயாரிப்பு நிறுவனங்கள் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதுதான் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி" என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x