Published : 27 Jan 2015 12:08 PM
Last Updated : 27 Jan 2015 12:08 PM

வேலை வேண்டுமா? : டிரெய்னி பொறியாளர் பணி

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய நீர்மின் நிறுவனத்தில் (என்.எச்.பி.சி.) நிரப்பப்பட உள்ள 87 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிரெய்னி பொறியாளர்

காலியிடங்கள்: 87

வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎஸ்சி(பொறியியல்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

>http://www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் விவரங்கள் அறிய: > http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/gate-2015.pdf



பொறியாளர் பணி

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பட்டதாரி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு அமைந்திருக்கும்.

பணி:

பட்டதாரி பொறியாளர்

1. சிவில் இன்ஜினீயர்

2. எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்

3. மெக்கானிக்கல் இன்ஜினீயர்

4. எலக்ட்ரானிக்ஸ் தொலைதொடர்பு இன்ஜினீயர்

5. இன்ஸ்ருமெண்டேஷன் இன்ஜினீயர்

6. கெமிக்கல் இன்ஜினீயர்

வயது வரம்பு: 30.06.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 30.06.1990 பிறகு பிறந்திருக்கக்கூடாது.

கல்வித்தகுதி: முழுநேர படிப்பாக சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

குழு விவாதம், குழு பணி மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.260. இதனை எஸ்பிஐ வங்கிக் (HPCL Powerjyoti கணக்கு எண்- 32315049001) கிளைகளில் செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

>www.hpclcareers.com அல்லது >www.hindustanpetroleum.com ஆகிய இணைய தளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.02.2015

மேலும் விவரங்கள் அறிய: > http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/gate-2015.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x