Published : 27 Jan 2015 02:44 PM
Last Updated : 27 Jan 2015 02:44 PM

வெற்றி நூலகம் - 27.01.2015

அறிவியல் ஒளிவிளக்கைப் பல இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகள் ஏற்றிவைத்துள்ளன. ஆனால், அவை இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காணமுடியாத இருண்ட சரித்திரமாக இருக்கின்றன. அவற்றை உணர்ச்சி பொங்க விளக்குகிறார் சிறுவர் இலக்கியத்துக்கான 2014 - ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற ஆயிஷா நடராசன்.

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ஆசிரியர்: இரா.நடராசன்

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்ஸ்,

தேனாம்பேட்டை, சென்னை- 600 018.

தொடர்புக்கு: 044-24332424 விலை:ரூ-30



ஆந்தையின் கண்கள் அகலமாக இருப்பது, தேனடையின் அறைகள் அறுகோணத்தில் இருப்பது, பாரடே கூண்டு, இசைக்கும் பலூன் என 56 வகையான புதுமைகளுக்கு அறிவியல் விளக்கங்கள் கொண்ட நூல்.

அறிந்ததே அறிவியல்

ஆசிரியர்: சி.அருள் ஜோசப் ராஜ்

வெளியீடு: பேனா முனை வெளியீடு, 3,

மீனாட்சி நகர், ஆனைக்குப்பம், கடலூர்-607 001.

தொடர்புக்கு:9865480887

விலை: 110

இந்தியாவில் விஞ்ஞானச் சாதனை படைத்து நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி தமிழகம் தந்த சர்.சி.வி. ராமன்தான். நோபல் பரிசுகளை அதிகமாகப் பெற்ற அமெரிக்கர்களில் இந்தியாவிலிருந்து போனவர்கள் அதிகம். அறிந்த விஞ்ஞானிகள் சிலர். நாம் இன்னும் அறியாத விஞ்ஞானிகள் பலர் என்கிறது இந்த நூல். இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகளைப் பேசுகிறது.

இந்திய விஞ்ஞான மேதைகள்

ஆசிரியர்: சிவரஞ்சன்

வெளியீடு: மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ்,

கவுரிவாக்கம், சென்னை 600 073.

தொடர்புக்கு:9440 41871. விலை:ரூ-100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x