Published : 27 Nov 2014 10:52 AM
Last Updated : 27 Nov 2014 10:52 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 30

பொது அறிவியல்

891. உயிரியலில் பூச்சியியல் பற்றிய படிப்பு எது?

892. உடலில் பித்தநீர் சுரக்கும் பகுதி எது?

893. உணவை தண்டில் சேமிப்பது எது?

894. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?

895. வைட்டமின்-சி குறைபாடு காரணமாக வரும் நோய் எது?

896. பறவைகளைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?

897. பச்சையம் இல்லாத தாவரம் எது?

898. ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் வாயு எது?

899. கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு எது?

900. தாவரத்தின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது?

901. தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?

902. Horticulture என்பது என்ன?

903. ஆப்பிள் வெட்டிய சில நிமிடங்களில் அது பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது ஏன்?

904. பொதுவாக இரவு நேரங்களில் மலரும் பூ என்ன நிறத்தில் இருக்கும்?

905. மனித உடலில் உள்ள கழிவுநீக்க உறுப்புகள் யாவை?

906. நமது இதயம் நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கிறது?

907. குழந்தையின் இதயத் துடிப்பு வேகம் சாதாரண மனிதனை விட குறைவா? அதிகமா?

908. எல்லா ரத்தப் பிரிவினருக்கும் பயன்படும் ரத்தப்பிரிவு எது?

909. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?

910. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எது?

911. மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?

912. உடலில் எந்த பாகம் பழுதடைவதால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது?

913. பென்சிலின் மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

914. வைட்டமின்-டி குறைபாடு காரணமாக தோன்றும் நோய் எது?

915. AIDS என்பதன் விரிவாக்கம் என்ன?

916. சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் எப்படிப்பட்டவை?

917. ரத்தம் உறையாமைக்கு எந்த வைட்டமின் குறைபாடு காரணம்?

918. மஞ்சள் காமாலை நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?

919. பயோரியா நோய் தாக்கும் உறுப்பு எது?

920. வெறி நாய் கடியால் தாக்கப்படும் பகுதி எது?

921. Adam Apple என்பது என்ன?

922. ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணம் எது?

923. மது குடித்தவன் தள்ளாடுவது ஏன்?

924. மனித உடலில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?

925. ஆக்ஸிஜன் படகு என அழைக்கப்படுவது எது?

விடைகள்

891. Entomology 892. கல்லீரல் 893. இஞ்சி 894. அட்ரினலின் 895. ஸ்கர்வி 896. Ornithology 897. காளான் 898. ஆக்ஸிஜன் 899. ஜப்பான் 900. மகரந்தப்பைகள் 901. சூலகம் 902. தோட்டக்கலை 903. ஆப்பிளில் உள்ள பெர்ரஸ் (இரும்புச்சத்து) ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் 904. வெள்ளை 905. தோல், சிறுநீரகம், நுரையீரல் 906. 72 தடவை 907. அதிகமாக இருக்கும் 908. “ஓ” வகை ரத்தப்பிரிவு 909. “ஏபி” பிரிவு 910. இன்சுலின் 911. 75 சதவீதம் 912. சிறுநீரகம் 913. பென்சிலின் நொட்டேட்டம் 914. ரிக்கெட்ஸ் 915. Acquired Immuno Deficiency Syndrome 916. லேகியம், சூரணம், குளிகைகள் 917. வைட்டமின்-கே 918. கல்லீரல் 919. பல் ஈறுகள் 920. மூளை 921. தொண்டையில் உள்ள ஓர் உடல் உறுப்பு 922. ஹீமோகுளோபின் 923. சிறுமூளை பாதிக்கப்படுவதால் 924. 206 925. ஹீமோகுளோபின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x