Published : 24 Nov 2014 10:27 AM
Last Updated : 24 Nov 2014 10:27 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 27

இந்திய அரசியலமைப்பு

781. பாராளுமன்றத்தில் இரு அவைகளும் கூட்டப்படாமல் இருக்கும்போது சட்டம் இயற்றும் அதிகாரத்தை குடியரசு தலைவருக்கு அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

782. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனையாவது சட்டத்திருத்தத்தால் திருத்தப்பட்டது?

783. இந்தியாவில் நிதி நெருக்கடி எத்தனை தடவை நடைமுறைப்படுத்தப்பட்டது?

784. கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கு மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை எந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

785. தற்போதுள்ள லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டு வரை மாற்றப்படாமல் இருக்கும்?

786. பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டவடிவம் பெறுவதற்கு எத்தனை நிலைகளை கடந்துவர வேண்டும்?

787. மரண தண்டனையை நீக்கி மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

788. இந்திய துணை பிரதமராக பதவி வகித்த காலத்தில் இறந்தவர் யார்?

789. குடியரசுத் தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவியில் யாரும் இல்லாதபோது, யார் அப்பணியை மேற்கொள்ள முடியும்?

790. தூக்குத்தண்டனையை ரத்துசெய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?

791. மகாராஷ்டிரம், குஜராத் எந்த மாநி லத்தில் இருந்து எப்போது பிரிக்கப் பட்டு தனி மாநிலம் ஆனது?

792. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி என அழைக்கப்படுபவர் யார் ?

793. உள்ளாட்சி அரசாங்க அமைப்பில் கடைசி நிலை என எதை அழைக்கிறோம்?

794. ராஜ்ய சபாவின் தலைவர் யார்?

795. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது பாராளுமன்றம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?

796. மத்திய அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கும் மிகாமல் பிரதமர் நியமித்துக்கொள்ளலாம் என எத்தனையாவது சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

797. இந்திய அரசியலமைப்பின் முகவுரை முதன்முதலில் எப்போது திருத்தம் செய்யப்பட்டது?

798. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் தகராறை தீர்த்துவைக்கும் அமைப்பு எது?

799. மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை எப்போது கொண்டுவரப்பட்டது?

800. நெருக்கடி காலத்தில் ஒரு மாநில சட்டப்பேரவையின் காலத்தை நீட்டிப்பு செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

801. இந்திய பாராளுமன்ற வரலாற்றில் எந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் "குற்றஞ்சாட்டப்படல்" (Impeachment Proceeding) நடவடிக்கை எடுக்கப்பட்டது?

802. உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

803. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?

804. இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

805. மரண தண்டனைக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இந்திய குடியரசு தலைவருக்கு எந்த விதியில் வழங்கப்பட்டுள்ளது?

806. நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது?

807. எந்த மாநிலம் 10-வது மக்களவையில் பிரதிநிதித்துவம் பெறாமல் இருந்தது?

808. இந்திய அரசியலமைப்பின் ஆன்மா (Soul) என அழைக்கப்படுவது எது?

809. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?

810. லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவு யூனியன் பிரதேசங்களில் இருந்து எத்தனை மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

811. இந்தியாவில் பிரிந்த முதல் மொழிவாரி மாநிலம் எது?

812. தமிழ்நாட்டில் எத்தனை லோக்சபா தொகுதிகள் உள்ளன?

813. தமிழகத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எத்தனை?

814. மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்க வகைசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

815. தற்போதைய மக்களவை (16-வது மக்களவை) சபாநாயகர் யார்?

விடைகள்

781. பிரிவு 123782. 42-வது சட்டத்திருத்தம் 783. ஒருதடவை கூட இல்லை 784. 97-வது சட்டத்திருத்தம் (2012) 785. 2026-ம் ஆண்டு வரை 786. 5 நிலைகள் 787. குடியரசுத் தலைவர் 788. சர்தார் வல்லபாய் படேல் 789. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 790. இல்லை 791. மும்பை மறுசீரமைப்பு சட்டம் 1960-ன்படி 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது 792. பி.ஆர்.அம்பேத்கர் 793. கிராம பஞ்சாயத்து 794. குடியரசுத் துணைத்தலைவர் 795. ஏப்ரல் 1957 796. 91-வது சட்டத்திருத்தம் 797. 1976-ம் ஆண்டு 798. உச்சநீதிமன்றம் 799. 1959-ல் 800. பாராளுமன்றம் 801. நீதிபதி வி.ராமசாமி 802. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் 803. ஆர்.கே. சண்முகம் செட்டியார் 804. 1957 805. விதி எண் 72 806. 76-வது சட்டத்திருத்தம் 807. ஜம்மு-காஷ்மீர் 808. முகப்புரை 809. ஜனவரி 2, 1957 810. தலா ஒரு உறுப்பினர் 811. ஆந்திரா 812. 39 813. 18 814. 356 சட்டப்பிரிவு 815. சுமித்ரா மகாஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x