Last Updated : 28 Jun, 2016 11:33 AM

 

Published : 28 Jun 2016 11:33 AM
Last Updated : 28 Jun 2016 11:33 AM

ஆங்கிலம் அறிவோமே - 116: சிறுபிள்ளைத்தனமா, இல்லை குழந்தைத்தனமா?

நண்பர் ஒருவர், “I do not know where family doctors acquired illegibly perplexing handwriting’’ என்கிற வாக்கியத்தின் சிறப்பு என்ன என்று கேட்டிருந்தார்.

முதல் இரு நிமிடங்களுக்குப் புரியவில்லை. பிறகு புரிந்தவுடன் ‘அட’ என்று பாராட்டத் தோன்றியது. நீங்களும்தான் அந்த வாக்கியத்தின் சிறப்பு என்ன என்பதைக் கொஞ்சம் யோசியுங்களேன்.

***

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விஜயம் செய்ததை வடகொரியா ‘Childish’ என்று குறிப்பிட்டிருக்கிறதே. இதற்கு என்ன அர்த்தம்? “குழந்தைமனம் என்பது வரம்தானே?” என்று ஆச்சரியப்படுகிறார் ஒரு நண்பர்.

வடகொரியா அமெரிக்க அதிபரைப் பாராட்டிவிடாது. Childish என்றால் ‘சிறுபிள்ளைத்தனமான’ என்று பொருள். “எருமை மாடு வயசாகுது இப்படி childish ஆக நடந்துக்கிறியே” என்பதுபோல்.

ஆனால் ஒரு குழந்தையைப் போன்ற வெள்ளை மனம், குழந்தையைப் போன்ற வசீகரப் புன்னகை என்றெல்லாம் விவரிக்கும் போது childlike என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வழக்கம். ‘குழந்தைத்தனமான’ என்று இதற்குப் பொருள்.

***

“ஒரு பகுதியில் but otherwise என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இரண்டு conjunctions அடுத்தடுத்து வரலாமா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

I have a bit of stomach ache, but otherwise I am fine என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதை I have a bit of stomach ache; otherwise I am fine என்றும் எழுதலாம்.

The train was crowded, but otherwise the journey was pleasant என்று எழுதுவதுண்டு.

பொறியியல் துறையில் ஹார்டி கிராஸ் என்பவரின் பிரபல மேற்கோள் இது. “Strength is essential, but otherwise unimportant”.

and therefore என்ற வார்த்தைகளும் அடுத்தடுத்து வருவதை அறிந்திருக்கலாம்.

***

TANDEM

“We should work in tandem” என்று என் மேலதிகாரி கூறினார். இதற்கு என்ன அர்த்தம்? என்பது ஒரு வாசகரின் கேள்வி.

லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்த வார்த்தை tandem. இதற்குப் பொருள் ‘நீளமாக’ அல்லது ‘நீண்ட நாட்களுக்குப் பின்’.

ஒன்றுக்குப் பின்னால் ஒன்று என்பதுபோல் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியைக் குறிக்கத்தான் இந்த வார்த்தை முதலில் பயன்பட்டது. இப்போது இருவர் அமர்ந்து இருவருமே ஒரே சமயத்தில் ஓட்டக் கூடிய சைக்கிளை tandem என்று அழைக்கிறார்கள்.

Working in tandem என்றால் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்வது என்றும் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். உங்கள் மேலதி காரி கூறியது அந்த அர்த்தத்தில்தான் இருக்கும்.

***

இப்பகுதியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட வாக்கியத்தின் சிறப்பு இதுதான். அதன் முதல் வார்த்தையில் ‘I’ என்ற ஒரு எழுத்துதான் உள்ளது. இரண்டாவது வார்த்தையில் ‘do’ என்று இரண்டு எழுத்துகள் உள்ளன. இப்படியே தொடர்ந்தால் அது அந்த வாக்கியத்தின் எத்தனையாவது வார்த்தையோ அத்தனை எழுத்துகள் அதில் உள்ளன என்பதை அறிவீர்கள்.

சொல்லப்போனால் அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியைத்தான் தொடக்கத்தில் அளித்திருக்கிறேன். அந்த முழு வாக்கியமும் இதோ.

‘’I do not know where family doctors acquired illegibly perplexing handwriting; nevertheless, extraordinary pharmaceutical intellectuality counterbalancing indecipherability transcendentalizes intercommunication’s incomprehensibleness”.

முதல் வார்த்தையில் ஒரு எழுத்தும், கடைசி (இருபதாவது) வார்த்தையில் இருபது எழுத்துகளும் உள்ளன என்பதை நீங்கள் கணக்கிடலாம். வாசகர்களும் இதே போன்று ஒரு வாக்கியத்தை எழுதி மூன்று நாட்களுக்குள் அனுப்பலாமே. இருபது வார்த்தைகளெல்லாம் தேவையில்லை. எட்டிலிருந்து பத்து வார்த்தைகள் போதும். அந்த வாக்கியம் ஒரு பொன்மொழி போலவோ, நகைச்சுவையாகவோ இருந்தால் மேலும் விசேஷம்.

***

Infinitive

verb என்பது என்ன? இதுவரை நான்கைந்து வாசகர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள்.

Run, read, walk, drink, take, give, believe, try என்பதுபோல் present tense-ல் நாம் பயன்படுத்தும் verb-தான் infinitive verb என்று தோராயமாக மனதில் கொள்ளலாம்.

அதை இப்படியும் கூறலாம். ஆங்கில அகராதியில் எந்த வகையிலான verb-க்கு நாம் பொதுவாக அர்த்தம் தேடுவோமோ அந்த verb-தான் infinitive verb எனலாம். அதாவது taking என்ற வார்த்தைக்கு நாம் அகராதியில் அர்த்தம் தேட மாட்டோம் take என்பதற்குத்தான் அர்த்தம் தேடுவோம். Was embarassed என்பதைப் படிக்கும்போது புரியவில்லை என்றால்கூட embarass என்ற வார்த்தைக்குத்தான் நாம் அர்த்தம் தேடுவோம். இந்த take, embarrass போன்றவை infinite verbs.

எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக present tense verbஐ infinitive verbஆகக் கொள்ளலாம் என்றேன். ஆனால் இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஒன்று, He, she, it ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் present tense verb-ல் ‘s’ அல்லது ‘es’ சேரும். Walks, eats, takes, does என்பதுபோல. ஆனால் infinitive verb என்பதில் இந்த ‘s’ அல்லது ‘es’ சேர்ந்திருக்காது.

தவிர ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. ‘Be’ என்ற infinitive verb ‘is’ என்று வடிவெடுக்கும்.

Infinitive verb என்றால் அது காலத்தைக் குறிக்காத verb என்று பொருள்.

Finite verb என்பது infinitive verb என்பதற்கு எதிரானது. Is coming, have come, will be coming என்றெல்லாம் வரும்போது அவற்றின் காலம் (tense) தெரிந்துவிடுகிறது இல்லையா?

இதையெல்லாம் சொல்லும்போது எனக்கு ஓர் எண்ணம் (எரிச்சல்?) உண்டாகிறது. ஒன்று, finite verb, infinite verb என்று சொல்லியிருக்க வேண்டும். அல்லது finitive verb, infinitive verb என்று சொல்லியிருக்க வேண்டும். எதற்காக இதில் ஒன்று அதில் ஒன்று என்று குறிப்பிட்டு அவற்றை எதிர்மாறான பொருள் வரும்படி அமைத்தார்களோ!

சிப்ஸ்

# Amicable என்றால் என்ன? Amiable என்றால் என்ன?

Amicable என்றால் நட்பான. Let us arrive at an amicable solution.

Amiable என்றால் விரும்பத்தக்க, lovely. She has amiable qualities.

# Laughing stock என்றால்?

பிறர் எள்ளி நகையாடும்படியான நிலையிலுள்ள ஒருவர்.

# Funny farm என்றால் என்ன?

மனநல மருத்துவமனை

(தொடர்புக்கு:aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x