Last Updated : 09 Jan, 2018 10:39 AM

 

Published : 09 Jan 2018 10:39 AM
Last Updated : 09 Jan 2018 10:39 AM

ஆங்கிலம் அறிவோமே 195: மறைமுகமாகச் சொன்னால் புரியாதா!

கேட்டாரே ஒரு கேள்வி

Blue blood என்பது பாராட்டா, இழிவா?

ஒருவர் விடைபெறும்போது இறுதியாகக் கூறும் அதிருப்தி வாக்கியத்தை Parting shot என்பார்கள்.

திரை விமர்சனத்தின் இறுதி வரி, “தியேட்டரை விட்டுக் கிளம்பும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது - அப்பாடா படம் முடிந்ததே என்று” எனச் சொல்லப்பட்டால் அது parting shot.

இதன் தொடக்கம் ஆயுதங்கள் தொடர்பானது. He fired a parting shot என்றால் இறுதியாக ஒருமுறை துப்பாக்கியை இயக்கினான் என்று கொள்ளலாம்.

ராஜினாமாக் கடிதங்களை எழுதும்போது இறுதியாக நாம் குறிப்பிடுவதுகூட Parting shot தான்.

Lama – Llama இரண்டும் ஒன்றா வேறா?

நண்பரே Lama என்பது திபெத் புத்தமதத் துறவிகளைக் குறிக்கிறது. திபெத்திய வார்த்தையான ‘Blama’ என்பதிலிருந்து உருவான வார்த்தை ‘lama’. Blamer என்பதற்குத் திபெத்திய மொழியில் ‘மிக உயர்ந்த ஒருவர்’ என்று பொருள்.

Llama என்பது ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. தென்னமெரிக்க விலங்கான இது சிலரால் வீட்டிலும் வளர்க்கப்படுகிறது.

ரத்தம் என்பது சிவப்பாக இருக்க வேண்டும். அசுத்த ரத்தம் என்பது நீலம் கலந்த சிகப்பாக இருக்கும். ஆனால், ஆங்கிலத்தில் ‘To have blue blood in veins’ என்ற ஓர் இடியம் உண்டு. உயர்குடியாகக் கருதப்படும் சீமான்களை அது குறிக்கிறது.

“Allusion என்பதற்கும், illusion என்பதற்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Allusion என்றால் மறைமுகக் குறிப்பு என்று கூறலாம். “கிருஷ்ணகாந்த் என்பது யாரோ அல்ல. அது கற்பனைப் பாத்திரமல்ல. கிருஷ்ணகாந்தின் வயது 16. எனக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. எனக்குத் திருமணமான ஒரே வருடத்தில் என் மகன் பிறந்தான்” என்று ஒருவர் கூறும்போது He makes vague allusions to Krishnakant being his son.

ஊழலுக்குப் பெயர்போன கட்சி என்று தொடங்கி ஒரு கட்சியின் பெயரைக் கூறாமலேயே அது குறித்த மேலும் சில குறிப்புகளையும் கொடுக்கும்போது அது எந்தக் கட்சி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்படி மறைமுகமாகக் குறிப்பிடுவதுதான் allusion. It is the allusions that lend charm to this book. Those people are people of messages and signal of all allusions and in direct expression.

Illusion என்றால் பிரமை. அதாவது உண்மை அல்லாத ஒரு சிந்தனை அல்லது நம்பிக்கை.

I am under no illusion about the man I married என்றால் அவருக்குத் தன் கணவரைப் பற்றிய எந்தப் பிரமையோ தவறான புரிதலோ இல்லை என்று பொருள். அதாவது கணவரைப் பற்றி, உள்ளது உள்ளபடி புரிந்துவைத்திருக்கிறார்.

A large mirror in a room can create the illusion of space என்றால் புரிகிறது அல்லவா? அந்த அறை அப்படியொன்றும் பெரிது அல்ல. ஆனால், கண்ணாடியின் பிரதிபலிப்பு காரணமாக அந்த அறை பெரிதாகக் காட்சியளிக்கிறது என்று பொருள்.

முகநூலில் ஒருவர் “You are meat puppet” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பொருள் என்ன?

தொழில்நுட்பம் தொடர்பாக உருவான வார்த்தை இது. Blogs-களில் தன் கருத்தை வெளியிட்டுப் பிறர் கவனத்தைப் பெற நினைப்பவர் எனலாம். என்றாலும் ஒருவரின் கருத்துகளைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே (லைக்ஸ் போடுவதற்காகவே) ஒரு ஆன்லைன் குழுவில் சேருபவரைத்தான் இப்படி அதிக அளவில் குறிப்பிடுகிறார்கள்.

போட்டியில் கேட்டுவிட்டால்?

Since he had an edge over the other students he was ________

a) Selected

b) Rejected

c) Kept in waiting list

d) Arrested

“Having an edge” என்றால் பிறரைவிட ஓரளவு சிறப்பாக இருத்தல் அல்லது செயல்படுதல் என்று பொருள்.

பிற மாணவர்களைவிட மேலும் கொஞ்சம் சிறப்புகள் இருக்கிற ஒருவரை வேண்டாமென்று மறுக்கமாட்டார்கள் (எனவே, rejected என்பது தவறு). காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கமாட்டார்கள் (எனவே, kept in waiting list என்பதும் தவறு). கைது செய்யமாட்டார்கள் (எனவே, arrested என்பதும் தவறு).

பிற மாணவர்களைவிட முன்னணியில் இருப்பவரைத் தேர்வு செய்வது இயல்பு. எனவே, selected என்பதுதான் சரியான விடை.

Since he had an edge over the other students he was selected.

சிப்ஸ்

Posy என்றால்?

சிறிய பூச்செண்டு அல்லது பூங்கொத்து.

Too many cooks spoil the broth என்கிறார்களே. Broth என்றால் என்ன?

தினைமாவு மேற்புறம் பூசப்பட்ட இறைச்சி அல்லது காய்கறிகள்.

Collaborate என்பதற்கும், corroborate என்பதற்கும் என்ன வேறுபாடு?

Collaborate என்றால் ஒருவருடன் சேர்ந்து பணிபுரிவது. Corroborate என்றால் ஒன்றை உறுதிப்படுத்துவது.

தொடர்புக்கு : aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x