Last Updated : 05 Dec, 2017 11:36 AM

 

Published : 05 Dec 2017 11:36 AM
Last Updated : 05 Dec 2017 11:36 AM

ஆங்கிலம் அறிவோமே 189: வேகமாகத் தயாரிக்கும் காபி இல்லை!

கேட்டாரே ஒரு கேள்வி

‘வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது’ என்று சொல்லும் வழக்கம் தமிழில் உண்டு. அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்துவதை இப்படி வர்ணிப்பார்கள். ‘Moving Heaven and Earth’ என்ற புத்தகத்தைப் படித்தேன். இதற்கும் அதே அர்த்தம்தானா?”

****************

Castor என்றால் என்ன?

பெரிய, கனமான மேஜை, கட்டில் போன்ற ஃபர்னிச்சர் சிலவற்றின் கீழ்ப் பகுதியில் சிறிய, பல திசைகளிலும் சுழலக்கூடிய, சக்கரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எளிதில் நகர்த்துவதற்கு இவை வழிசெய்யும். இவற்றை castors என்பார்கள்.

ஒரு பாட்டில். அதன் மேலே துளைகள் இடப்பட்டிருக்கும். அதாவது உள்ளேயிருக்கும் திரவம், துகள் வெளியே தெளிக்கப்படுவதற்கான வழிமுறை செய்யப்பட்டிருக்கும். இதுவும் caster அல்லது castor.

english 2jpg100 

‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகரே, இதற்குப் பொருள் அது அல்ல. Moving heaven and earth to do something என்றால் ஒன்றைச் செய்வதற்காக மிகுந்த முயற்சிகளை எடுத்துக்கொள்வது. ஒரு பிரச்சினையைத் தீர்க்க எல்லா வழிகளையும் முயன்றுபார்ப்பது.

“A cat with mittens won’t catch mice” என்ற பழமொழியைப் படித்தேன். இதில் இடம்பெறும் mittens என்ற வார்த்தைக்குப் பொருள் என்ன?

Mitten என்றால் கையுறை. அதாவது இரண்டாகப் பிரிந்துள்ள கையுறை. கட்டை விரலுக்கு ஒரு பகுதி, மீதி நான்கு விரல்களுக்குமாகச் சேர்த்து ஒரு பகுதி என்று இருப்பது glove.

கேள்வி கேட்ட நண்பருக்கு பதிலளிக்கும்போதே மேற்படிப் பழமொழி பலவித அற்புதக் கோணங்களைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சில பழமொழிகளையும் பகிர்ந்துகொள்ளத் தோன்றுகிறது.

If you don’t like my apples, don’t shake my tree. (அமெரிக்கப் பழமொழி)

Those who are dealing onions no longer smell them (ஜெர்மானியப் பழமொழி)

If you play alone, you will win. (சிரியப் பழமொழி)

Teachers die, but books live on. (நெதர்லாந்துப் பழமொழி)

A child learns quicker to talk than to be silent. (நார்வே பழமொழி)

இதுபோன்ற சிந்தனைக் கோணங்களை விரிவுபடுத்தும் பல்வேறு நாடுகளில் நிலவும் பழமொழிகளின் ஆங்கில வடிவத்தை அவ்வப்போது காண்போம்.

எழுதும்போது வாக்கியத்தின் நடுவே சிறிய கோடு (dash) பயன்படுத்துவது அவசியமா? இப்படியொரு கேள்வி எழுந்திருக்கிறது ஒரு வாசகருக்கு.

அதிகத் தகவலை உணர்த்த dash பயன்படுகிறது.

He started the business for one reason – money.

He started the business for three reasons – adventure, fame and money.

வாக்கியத்தின் நடுவே மேலும் கூடுதல் தகவலை அளிப்பதானால், அதிகப்படியான தகவலுக்கு முன்னும் பின்னும் இரண்டு சிறு கோடுகளைப் பயன்படுத்த வேண்டும்.

He robbed the Bank – the most popular in the city – for sheer adventure.

He robbed the Bank for notoriety, need – and adventure. இந்த வாக்கியத்தில் சாகசத்தைக் குறிக்கும் adventure என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“Behave as if you own the place” என்று கூறுவதுதான் விருந்தோம்பலின் உச்சம் இல்லையா?

அதற்கு முற்றிலும் எதிரான அர்த்தம் கொண்டது இந்த வாக்கியம். ஒரு நடத்தையை ஏற்றுக்கொள்ளாதபோது இப்படிக் கூறுவோம். நமது வீட்டில் ஒருவர் எந்த ஒரு இங்கிதமும் இல்லாமல் நடந்துகொள்கிறார், தேவைக்கு அதிகமான உரிமைகளை எடுத்துக்கொள்கிறார் என்றால், “He behaves as if he owns the place” என்று எரிச்சலாகக் கூறுவோம்.

“Expresso Coffee என்கிறார்களே அது மிக வேகமாகத் தயாரிக்கப்படும் காபி என்பதாலா?” என்று கேட்கிறார் ஒரு நண்பர்.

ரயில்களில் பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் என்று இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் பாசஞ்சர் ரயில் பல ஸ்டேஷன்களில் நின்று மெதுவாகச் செல்லும். எக்ஸ்பிரஸ் ரயில் குறைவான ஸ்டேஷன்களில் நின்று வேகமாகச் செல்லும். இதை அடிப்படையாகக்கொண்டு வேகமாக உருவாக்கப்படும் காபி இது என்று நீங்கள் கருதியிருக்கலாம்.

ஆனால், அதன் எழுத்துகள் Espresso என்பதுதான், expresso அல்ல.

இத்தாலிய மொழியில் pressed out என்பதை ‘espresso’ என்று குறிப்பிடுவார்கள். நீராவியின் அழுத்தத்தால் உருவாவதால் அந்தப் பெயர்.

****************

சிப்ஸ்

# Inventas vitam juvat excoluisse

perartes என்று நோபல் பதக்கங்களில் குறிப்பிடுவார்களாமே - இதற்கு என்ன அர்த்தம்?

‘புதிய கண்டுபிடிப்பால் இந்த உலகுக்கு மகிழ்ச்சி கூட்டியவர்கள்’.

# Your heart is not in it என்றால் என்ன பொருள்?

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு விருப்பமில்லை என்று பொருள். அதாவது ஏனோதானோவென்று செய்கிறீர்கள்.

# Momentary என்பதற்கும், momentous என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Momentary என்றால் தற்காலிகமாக. Momentous என்றால் மிக முக்கியமான.

தொடர்புக்கு:aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x