Last Updated : 14 Nov, 2017 11:43 AM

 

Published : 14 Nov 2017 11:43 AM
Last Updated : 14 Nov 2017 11:43 AM

ஆங்கிலம் அறிவோமே 186: வடிகட்டிய குப்பை தெரியுமா?

கேட்டாரே ஒரு கேள்வி

Filter செய்வது, filter out செய்வது இரண்டும் ஒன்றுதானே?

***************

“ஒரு வார்த்தையின் எழுத்துகள் எனக்குத் தெளிவாகத் தெரியும். அதே நேரம் அதைத் தவறாகவும் சிலர் எழுதலாம் என்பதும் தெரியும். ஆனால், என்னையும் அறியாமல் நானே ஓரிருமுறை அந்த வார்த்தையைத் தவறான எழுத்துகளுடன் எழுதிவிடுகிறேன். இத்தனைக்கும் எனக்கு ஞாபக மறதி கிடையாது. நான் வயதானவனும் அல்ல. என்ன செய்யலாம்?”

ஆதங்கப்படும் நண்பரே, உங்களுக்கு ஆறுதல் அளிக்கத்தான் “Murphy’s law” இருக்கிறது.

மர்ஃபி ஒரு வான்படைப் பொறியாளர். தளபதி டாக்டர் ஜான் ஸ்டாப் என்பவர் மர்ஃபியைத் தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். மர்ஃபி தனக்கு உதவியாளராக ஒருவரைப் பணியமர்த்தினார். அவர் கூறியதையெல்லாம் தெளிவாகக் கேட்டுக்கொண்ட உதவியாளர், அவர் சொன்னதற்கு நேரெதிரான வகையில் இணைப்புகளைப் பொருத்தினார். அப்போது மர்ஃபி கூறியது இதைத்தான். “ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன என்றால், அவற்றில் ஒரு வழி பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றால் யாராவது அந்த வழியில் செயல்பட்டு அந்தப் பாதிப்பை உண்டாக்கித்தான் தீருவார்”. இதுவே நாளடைவில் Murphy’s law என்று அறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல நகைச்சுவையான Murphy’s laws உருவாக்கப்பட்டன. “எனக்குன்னுதான் இந்த மாதிரி எல்லாம் வந்து தொலைக்கும்” என்று நாம் புலம்புவதெல்லாம் கிட்டத்தட்ட Murphy’s lawதான்.

Murphy’s law விதியைக் கொஞ்சம் கிண்டலாகச் சித்தரிக்கும் வேறு சில வாக்கியங்களைப் படித்து ரசிக்கலாமா?

Opportunity always knocks at the least opportune moment.

Once a job is fouled up, anything done to improve it only makes it worse.

The remaining work to finish inorder to reach your goal increases as the deadline approaches.

If something is confidential, it will be left in the copier machine.

Your best golf shots occur always when you are alone.

Love letters and money due always arrive late while junk mails arrive on the same day.
 

triathlonjpg100
 

மூன்று என்ற அர்த்தம் கொண்ட ‘tri’ என்ற முன்னொட்டை (prefix) எப்படி உச்சரிப்பது?

Triplicate என்ற வார்த்தையில் ‘ட்ரி’ என்று உச்சரிக்க வேண்டும். ஆனால் triceps, triathlon, tricycle, trivalent போன்றவற்றில் ‘ட்ரை’ என்று உச்சரிக்க வேண்டும்.

Trio என்பதிலுள்ள tri பகுதியை ‘tree’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும். அதாவது ‘ட்ரீயோ’.

***************

Filter செய்வது என்றால் வடிகட்டுதல். Filter out செய்வது என்றால் வடிகட்டியதை வெளியேற்றுவது, அதாவது வேண்டாத பொருளை வெளியேற்றுவது.

“Relationship Manager என்று வங்கியின் ஒரு மேஜையில் ஒரு அறிவிப்பைப் பார்த்தேன். இதற்கு என்ன அர்த்தம்?”என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

ஒரு நிறுவனத்தின் Relationship Manager என்பவர் அந்த நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள உறவை மேம்படுத்தி நெருக்கமாக உதவுவார்.

ஒரு வங்கியில் ஒரு தொகையை நீண்ட காலத்துக்கு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அது எவ்வளவு காலத்துக்கு என்பதை நீங்கள்தான் தேர்ந்தெடுப்பீர்கள். Relationship Manager இருந்தால் அவர் எவ்வளவு காலத்துக்கு நீங்கள் அந்தத் தொகையை டெபாசிட் செய்தால் உங்களுக்கு லாபம் என்பதையும் கூறுவார். கடன் பெற வேண்டுமென்றால் எந்தத் திட்டத்தின்கீழ் அந்தக் கடனைப் பெற முடியும், அதற்கு என்னென்ன ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதுபோன்ற தகவல்களை உங்களுக்கு அளிப்பார். வங்கியில் புதிதாக ஏதாவது திட்டம் அறிமுகமானால், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்.

தனிப்பட்ட மனிதர்களிடம் மட்டுமல்ல, சகோதர நிறுவனங்களுடன் உள்ள உறவை மேம்படுத்தவும் Relationship Manager உதவுவார்.

தன்னை நியமித்த நிறுவனத்தின் நலனையும் மனத்தில் கொண்டு செயலாற்றுவார் Relationship Manager.

***************

None என்பது singular ஆ? Every என்பது?

பலருக்கும் இதில் சந்தேகம் எழுகிறது. None என்பது ஒருமைதான். No one. None of us is having lunch. ஆனால், பழக்கதோஷத்தில் None of us are having lunch என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.

Every என்பதும் singularதான். Every student I ask tells (tell அல்ல) me that he has plans to go out on weekends.

என்றாலும் he/she, his/her போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக Everyone brought their own lunch என்பதுபோல் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

தொடக்கம் இப்படித்தான்

Hue and cry

பிரெஞ்சு மொழியில் ‘Hue and cry’ என்றால் உரத்துக் குரல் கொடுத்தல் என்று பொருள். ஹாரன் ஒலியையும் இப்படிக் குறிப்பிடுவார்கள். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ‘Hue and cry’ என்பது சட்டப்படி ஒரு தெளிவான சொற்றொடராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பொதுஇடத்தில் யாராவது கொள்ளையடிக்கும்போது அங்கிருப்பவர்கள் எழுப்பும் சத்தத்தைக் குறிக்கிறது.

சிப்ஸ்

Enthuse என்றால்?

State enthusiastically என்று அர்த்தம். Enthuse என்பது பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் சொல்.

Finite verb என்றால்?

Tense-ஐயும் புலப்படுத்தும் verb. எடுத்துக்காட்டு – Went.

It is a dog’s life என்றால்?

நாய்ப் பொழப்பு. It is dog’s life for most daily wages labourers.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x