Last Updated : 25 Jul, 2017 10:04 AM

 

Published : 25 Jul 2017 10:04 AM
Last Updated : 25 Jul 2017 10:04 AM

ஆங்கிலம் அறிவோமே 170: அழகானவர்தான்.. ஆனால் அன்பானவரா?

கேட்டாரே ஒரு கேள்வி

“கேட்டாரே ஒரு கேள்வி” என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

***************

I wonder how many people will be celebrating Deepavali this year.

I wonder how many people will be celebrating Deepavali this year?

மேலே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரியென்று கேட்கிறார் ஒரு நண்பர். முதல் வாக்கியம்தான் சரி. நடுவே ‘How many’ என்ற வார்த்தைகள் வருவதாலேயே இறுதியில் கேள்விக்குறி இடம் பெறாது. ஏனென்றால் I wonder என்றுதான் வாக்கியம் தொடங்குகிறது.

கேள்விக்குறியில் முடிய வேண்டுமென்றால் இப்படி எழுதலாம்.

I wonder, “How many people will be celebrating Deepavali this year?”.

************

​Prognosis என்றால் என்ன?

நோய் தொடர்பான ஒன்றை முன்னதாகவே கணிப்பது. It is very difficult to make an accurate prognosis.

இந்த வார்த்தை பெரும்பாலும் நோய் தொடர்பானது என்றாலும் வேறு சில சூழல்களைக் கண்காணிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுகிறது. He made gloomy prognosis about overpopulation.
 

cockjpg

Cockpit என்ற வார்த்தைக்கும், சேவலுக்கும் தொடர்பு உண்டா?

 

சேவல் சண்டை நடக்குமிடத்தைக் cockpit என்பதுண்டு. ஆகாய விமானத்தில் விமான ஒட்டிக்கான அறையையும் cockpit என்பதுண்டு.

 

“Verbal என்பது oral என்பதற்குச் சமமானதா? அல்லது எதிரானதா?”

இப்படிக் கேள்வி எழுப்பியிருக்கும் நண்பரின் குழப்பத்தில் ஒருவித நியாயம் இருக்கிறது. Verbal என்பது வார்த்தைகள் தொடர்பானது. அது பேசப்படுவதாகவும் (oral) இருக்கலாம், எழுத்துப் பூர்வமாகவும் இருக்கலாம்.

அதே சமயம் He is very verbal என்றால் அவர் நிறையப் பேசுவார் என்று பொருள். Verbal abuse என்றால் பேச்சில் மட்டம் தட்டுகிறார் என்று பொருள். Verbal agreement என்றால் எழுதப்படாத, வாய்வார்த்தை ​மூலமாக மட்டுமே செய்து கொள்ளப்பட்ட ஒப்புதல் என்று பொருள்.

Verbal என்பது ஒருவேளை verb தொடர்பானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். Verbal adjective, verbal noun என்றெல்லாம் குறிப்பிடுகையில் verbal என்ற வார்த்தை verb என்ற அடிப்படையைக் கொண்டதாகத்தான் இருக்கிறது.

************

கேட்டாரே ஒரு கேள்வி - What a question!.

************

Hangar - Hanger

பசியைக் குறிக்கும் hunger என்பது இவை இரண்டுமல்லாத வார்த்தை.

உங்களிடம் hanger இருந்தால் உங்கள் பொருளாதார நிலை எதுவாகவும் இருக்கலாம். உங்களிடம் hangar இருந்தால் நீங்கள் ஒரு மாபெரும் கோடீஸ்வரர்!

Hanger என்பது நாம் சட்டை, பேண்ட் போன்றவற்றைத் தொங்க விடுவது. Hangar என்றால் ஆகாய விமானங்களை ஓய்வின்போது நிறுத்துமிடம். அங்கு விமானங்களை ரிப்பே​ர் செய்யும் பணியும் நடக்கும்.

************

‘ஒருவரை ‘lovely, disobedient, tireless man” என்று குறிப்பிடலாமா?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Lovely என்றால் வனப்புள்ள என்று அர்த்தம். He is a lovely man என்றால் அவன் அழகானவன் என்று பொருள். அன்பானவன் அல்ல. அவன் அன்பு செலுத்துகிறான் என்றால் loving. அவன் மீது பிறர் அன்பு செலுத்துகிற அளவுக்கு இருக்கிறான் அல்லது நடந்து கொள்கிறான் என்றால் lovable அல்லது loveable.

“அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’ என்பதை ஆங்கிலத்தில் “Loveable, rebellious and relentless man” எனலாம்.

**********

“I am not on talking terms with him’’ என்பதுபோல் எனக்குத் தெரிந்த சிலர் அவ்வப்போது உரையாடலில் குறிப்பிடுகிறார்கள். Talking terms என்பது சரியல்ல. Speaking terms என்பதே சரி.

ஒருவரிடம் நட்பாகவும், நாக​ரீகத்துடனும் பேசுவதை on speaking terms என்கிறார்கள். இரண்டுபேர் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்றால் (அவர்கள் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும்) அவர்கள் speaking termsல் இருப்பதாகக் கூற மாட்டார்கள். முக்கியமாக நீண்ட விவாதத்திற்குப் பிறகு நட்புடனும் பேசுகிறார்கள் என்றால் ​அப்போது they are on speaking terms என்று கூறுவதுண்டு. We had an argument, but we are back on speaking terms now.

**********

தொடக்கம் இப்படித்தான்

“PC என்றால் Police Constable என்பது புரிகிறது. Constable என்ற வார்த்தையின் பின்னணி என்ன?’’ என்ற கேள்வியைத் தொடுத்திருக்கிறார் ஒரு நண்பர்.

முதலாம் உலகப்போரின் முடிவு வரை ராணுவ வெற்றிக்குக் குதிரைப்படை மிக முக்கியமான ஒரு காரணமாக விளங்கியது. இந்தக் குதிரைப்படை சீனியர் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் இருப்பது வழக்கம். இவரை Count of the stables என்று அழைப்பது வழக்கம். (Stable என்றால் குதிரை லாயம் என்று ஓர் அர்த்தம் உண்டு).

பிரெஞ்சு மொழியில் இவரை comes stabuli என்பார்கள். இதுதான் நாளடைவில் constable ஆகிவிட்டது. பிரான்ஸைப் பொருத்தவரை அரசருக்கு அடுத்ததாக அதிகாரம் பொருந்தியதாக இந்தப் பதவி விளங்கியது.

நாளடைவில் படையில் High Constable, Petty Constable அல்லது Parish Constable ​போன்ற பல பிரிவுகள் உண்டாயின. Parish Constable என்பவர் பகுதி வேலை செய்பவராகவும், இதற்கான ஊதியம் எதுவும் வாங்கிக் கொள்ளாதவராகவும் இருந்தார் (Parish என்றால் மாவட்டம், வட்டம் என்பதையெல்லாம்விட கீழான ஒரு சுருங்கிய பகுதி). பிரிட்டனில் மிகவும் கீழ்மட்டக் காவல் அதிகாரியை PC என்று குறிப்பிட்டனர். இப்போது இந்தியாவில் PC என்று குறிக்கப்படுபவர்கூட Police Constable அல்ல, Parish Constable.

சிப்ஸ்

* Pulmonary என்றால் என்ன?

நுரையீரல் தொடர்பான.

* மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கைப்பிடியாக ஒரு பகுதி பொருத்தப்படுகிறதே இதற்கு ஆங்கிலத்தில் தனியாக ஏதாவது பெயர் உண்டா?

பொதுவாக Handrail. குறிப்பாக banister.

* Should, ought இரண்டுக்கும் ஒரே பொருள்தானே?

ஆம். ஆனால் ought என்ற வார்த்தையைத் தொடர்ந்து to என்ற வார்த்தை கட்டாயம் இடம் பெறும். We should see him tomorrow. We ought to see him tomorrow.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x