Published : 28 Jul 2014 09:30 AM
Last Updated : 28 Jul 2014 09:30 AM

12-ம் வகுப்பு படித்தோருக்கு மத்திய அரசுப் பணி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் தேர்வு – 2014க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதியும் 9-ம் தேதியும் நடைபெறும். மத்திய அரசு அலுவலகங்களில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளர்க் ஆகிய குரூப் சி நிலை பணிகளுக்கான 1997 பேரைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 12-ம் வகுப்பு படித்துள்ள ஆண்களும் பெண்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது

01.08.2014 அன்று 18-வயதிலிருந்து 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.08.1987-லிருந்து 01.08.1996க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுக ளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி

பத்தாம் வகுப்பு படித்த பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

எழுத்துத்தேர்வு, டேட்டா எண்ட்ரி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொது அறிவு, கணித அறிவு, ஆங்கில அறிவு, புத்திக்கூர்மை ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் எழுத்துத்தேர்வு அமையும். இரண்டு மணி நேரத்தில் 200 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதலாக 40 நிமிடங்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.100. இதை அஞ்சலகத்தில் கிடைக்கும் சிஆர்எஃப் ஸ்டாம்பாகவோ எஸ்பிஐ சலான் மூலமாகவோ கட்டலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் கட்டலாம். பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினரும், மாற்றுத்திறனாளிகளும், முன்னாள் ராணுவத்தினரும் கட்டணம் கட்ட வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் >http://ssconline.nic.in, >http://ssconline2.gov.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது >http://ssc.nic.in/notice/examnotice/CHSLE%202014%20APP%20FORM.pdf என்னும் இணையதள முகவரியில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி

19.08.2014 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x