Last Updated : 27 Jun, 2017 10:34 AM

 

Published : 27 Jun 2017 10:34 AM
Last Updated : 27 Jun 2017 10:34 AM

ஆங்கிலம் அறிவோமே 166: டாக்ஸிக்குக் கையசைப்பது எப்படி?

கேட்டாரே ஒரு கேள்வி

‘சவரம் செய்துகொள்ளும்போது வெட்டிக்கொண்டுவிட்டேன்’ என்பதை எப்படிக் கூறலாம்?

***************

Source என்பதற்கும், resource என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று மனிதவள வகுப்புப் பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டவர் கேட்டார்.

Source என்பதை மூலம் அல்லது ஆதாரப் புள்ளி என்று குறிப்பிடலாம்.

Milk is a good source of calcium. Glucose is the main energy source of the body.

அதாவது மனிதரோ இடமோ பொருளோ அதிலிருந்து (அல்லது அவரிடமிருந்து) ஏதோ ஒன்று கிடைக்கிறது என்றால் அது source.

Resource என்றால் ஒரு நிறுவனத்துக்குத் தொடர்ந்து கிடைக்கக்கூடிய பணம், பொருட்கள், ஊழியர்கள். We lack resources என்றால் இவையெல்லாம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று பொருள்.

Resource என்பதைப் பொதுவாக resources என்றுதான் பயன்படுத்துவோம். Human resources என்பது போல. எனினும், Human Resource Department என்றே குறிப்பிடுகிறோம். அது அந்த நிறுவனத்தின் ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பது, அவர்களை நிர்வகிப்பது, அவர்களுக்குப் பயிற்சி அ​ளிப்பது போன்றவற்றைச் செய்யும் துறை.

***************

‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகரின் குழப்பம் நியாயமானதுதான். ‘Cut while shaving’ என்றால் சவரம் செய்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஏதோ மரத்தை வெட்டிய மாதிரி இருக்கிறது!

I got cut while shaving என்றால் அர்த்தம் புரிகிறது (ஆனால், சவரம் நீங்களே செய்து கொ​ண்டீர்களா அல்லது முடி திருத்துபவர் செய்துவிட்டாரா என்பது இதில் விளங்கவில்லை).

I cut me while shaving என்று எழுதக் கூடாது. I cut myself while shaving என்பதுதான் சரி. ஏனென்றால் subject-ம், ​object-ம் ஒரே நபராக இருக்கும்போது, (myself, yourself, themselves போன்ற) reflexive pronoun-ஐத்தான் பயன்படுத்த வேண்டும்.


‘Hail a cab’ என்றால் என்ன பொருள்?

அமெரிக்க ஆங்கிலத்துக்கென்று சில தனிப்பட்ட idioms உள்ளன! அவற்றில் ஒன்று இது.

Hail a cab என்றால் ஒரு டாக்சியை வருமாறு கையசைப்பது.

நீங்கள் ஒருவேளை அமெரிக்கா செல்லலாம். அல்லது உங்கள் உறவினரும் நண்பரும் அமெரிக்காவில் வசித்துவிட்டு வந்தால் அவர்கள் கூறும் சில idioms உங்களுக்கு விளங்காமல் போகலாம். இதற்கு உதவும் வகையில் அப்படிப்பட்ட idioms சிலவற்றை இங்​கே விளக்குகிறேன்.

Don’t know the beans என்றால் ஒன்றைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்று பொருள். ​​Mitran does not know beans about airplanes என்றால் மித்ரனுக்கு ஆகாய விமானங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்று பொருள். (Aeroplane என்று கூறி நாம் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், நடைமுறையில் Airplane அல்லது aircraft என்றுதான் குறிப்பிடுகிறார்கள்).

Half a loaf என்றால் மிச்சம் மீதி என்று பொருள். ஆங்கிலத்தில் ஒரு ​பழமொழி உண்டு. ‘Half a loaf is better than none’.

“Do you think I will be satisfied with half a loaf? I want everything that is due to me”.

Downhill all the way என்றால் வாழ்க்கையில் தொடர்ந்து சரிவைச் சந்திப்பதாக அர்த்தமில்லை. மாறாகப் பயணம் மிக எளிதாக இருக்கிறது என்று அர்த்தம்.

‘I could eat a horse’ என்று ஓர் ​அமெரிக்கர் கூறினால் அவர் பயங்கரப் பசியோடு இருக்கிறார் என்றுதான் பொருள். (தமிழில் ‘பெருங்குடல் சிறுகுடலைத் தின்னும் பசி’ என்பதில்லையா, அதுபோல).

I will eat my hat என்றால் நான் மிக மிக வியப்படைவேன் என்று பொருள். உங்கள் த​ம்பி எதற்கெடுத்தாலும் நடுங்குபவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். “If my younger brother really joins Army, I will eat my hat” என்று நீங்கள் கூறலாம்.

உங்கள் மனைவி அல்லது காதலியைப் பார்த்து “You are like nothing on earth” என்று கூறிவிட்டு அவரை உச்சபட்சமாகப் பாராட்டிவிட்டதாக எண்ணிப் புளகாங்கிதமடைய வேண்டாம். அமெரிக்க ஆங்கிலம் அறிந்தவராக அவர் இருந்தால் விழிகளை விரித்துக் கோபப்படுவதிலிருந்து விவாகரத்து செய்வதுவரை எதைச் செய்யவும் வாய்ப்பு உண்டு. Like nothing on earth என்றால் மிகவும் அசுத்தமான அல்லது வெறுக்கத்தக்க வகையில் என்று பொருள். After a hectic day at office, he returned looking like nothing on earth.

Of the first water என்றால் மிகத்தரமான என்று பொருள்

போட்டியில் கேட்டுவிட்டால்?

The teachers have been observing the student’s _______ behavior, and have decided to take action against him.

(a) pleasant

(b) stoic

(c) indifferent

(d) polite

(e) impertinent

ஒரு மாணவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அது அவனது நல்ல நடத்தைக்காக இருக்காது. எனவே, pleasant, polite ஆகிய வார்த்தைகள் இங்குப் பயன்படுத்தக்கூடியவை அல்ல.

Stoic என்றால் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாத என்று பொருள். இந்தத் தன்மை உள்ள மாணவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

மீதமிருக்கும் வார்த்தைகள் indifferent-ம் impertinent-ம்.

Indifferent என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஆர்வம் காட்டாமை அல்லது சராசரித்தன்மை கொண்ட (Indifferent batting, indifferent scores என்பது போல). படிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம்தான். ஆனால் impertinent என்ற வார்த்தை அவமரியாதை செய்வது என்பதைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட மாணவன்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அதிகம். எனவே, impertinent இந்த இடத்தில் மேலும் சிறப்பாகப் பொருந்துகிறது.

The teachers have been observing the student’s impertinent behavior, and have decided to take action against him.

சரியான விடைகளை எழுதியவர்களின் முழுப் பட்டியல்.

T.மோதிலால் நேரு, மதுரை

தாரா தாமோதரன்,

R.சந்தூர்

பரத், மதுரை,

காஞ்சனா தனபாலன், கோயம்புத்தூர்

R.K.ஜீவபாரதி, கோவில்பட்டி

S.சுப்பிரமணியன், சாலிகிராமம், சென்னை

ஹேமா நரசிம்மன், கொட்டிவாக்கம், சென்னை

R.ஸ்ரீராம், ஈரோடு

தேன்சிங், மதுரை

லிலானி சங்கர், மதுரை

அக்ஷிதா வீரராகவன்

சுபா பிச்சையா, ரெட்டியார்பாளையம், புதுச்சேரி

V.K.R.ராகவன், உடுமலைப்பேட்டை

P.சிந்து ஸ்ரீ

மாலா, திண்டுக்கல்

அருண் பாலாஜி, திருமானூர், அரியலூர்.

S.செண்பகம், எம்.கே.கோட்டை, திருச்சி

N.அண்ணாமலை, கோடம்பாக்கம், சென்னை

பிரேம், தஞ்சாவூர்

D.சங்குமணி, சேலம்

M.சுரேஷ் பாபு, வீரவநல்லூர், திருநெல்வேலி

P.ஷெர்புதீன், கடலூர்

P.விசாகன், திருச்சி

ராக்போர்ட் மோகன், குளச்சல், கன்னியாகுமரி

M.ராஜ்மித்ரன், ஓசூர்

மீனாட்சி சுந்தரி, நெற்குன்றம்

K.முத்துராமன், தஞ்சாவூர்

V.முருகன், ஷெனாய் நகர், சென்னை

பி.ஹிமயா, ஸ்ரீரங்கம்.

L. பன்னீர் செல்வம், சைதாப்பேட்டை, சென்னை

சிவா கிருபானந்தன், சென்னை-116

S.சங்கர நாராயணன், கே.கே.நகர், சென்னை

P.பொன்னுசாமி, மடிப்பாக்கம், சென்னை.

N.சுவாமிநாதன், கோயம்புத்தூர்

வில்சன் தினேஷ்

G.சங்கர விஸ்வநாதன், திருநெல்வேலி.

C.வெங்கடேஸ்வரன், ஆலமரத்துப்பட்டி, திண்டுக்கல்.

D.காவியா, நெய்வேலி

A.விஜி, அரசாங்கழனி, சிட்லபாக்கம்.

M.சுந்தரம், மதுரை

தமிழ் செல்வி இன்பராஜ், சேலம்

பா.அழகி

ரம்யா, சேலம்

விஜய் அரவிந்தன், மதுரை

தணிகைவேல் மணியரசு, கடலூர்.

N.தேவிகுமாரி, மயிலை, சென்னை.

A.G.சிவராஜ், காவனூர், ராமநாதபுதம்.

ஆசன் ஜஸிமா,

ராம்ஜி, கும்பகோணம்.

கார்திகா ராமச்சந்திரன், மரவணேரி,சேலம்.

இர.கார்திகேயன், கருவம்பாளையம், திருப்பூர்.

ராஜமாணிக்கம், நாமக்கல்.

கே.பரமசிவம்,திருப்பாலை, மதுரை

R.பிரகாஷ், பொன்மலை

P.சதீஷ், துவரங்குறிச்சி

பொன்ஸ் சந்திரா, சென்னை-34

மைதிலி பாலகிருஷ்ணன்,

எஸ்.பத்மநாபன், ஆவடி, சென்னை

B.R.நவஸ்ரீ, சேலம்

நாச்சம்மை லட்சுமணன், கே.முத்துப்பட்டினம், காரைக்குடி.

ஃபரீதா பர்வின், பரமக்குடி

R.கிரி விஸ்வநாத், கவிந்தபாடி, ஈரோடு

R.கோபிநாதன், கம்பம், தேனி,

M.சரவணன், திண்டுக்கல்.

மேஜர் பொன்னுரத்தினம், புத்தூர், திருச்சி,

வட்சலா ரவிசங்கர், வேலூர்,

K.ரவீந்திரன், மடிப்பாக்கம், சென்னை.

சித்திரைசெல்வி, வனவாசி, சேலம்

ஏ.பிரகாஷ், கோயமுத்தூர்

கே.கே.பட்டியைச் சேர்ந்த E.அனந்தகுமார் எனும் வாசகர் Readers Digest-ல் சில anagrams-ஐப் படித்ததாகக் கூறி அவற்றை அனுப்பியிருக்கிறார். அவற்றில் வெகு சுவாரசியமான சில கீழே உள்ளன.

Dormitory = Dirty room

The earth quake =That queer shake

The morse code = Here come dots

Eleven plus two =Twelve plus one

தொடர்புக்கு:aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x