Last Updated : 23 May, 2017 10:19 AM

 

Published : 23 May 2017 10:19 AM
Last Updated : 23 May 2017 10:19 AM

ஆங்கிலம் அறிவோமே 161: வேற வார்த்தையை யோசிங்க!

கேட்டாரே ஒரு கேள்வி

United Arab Emirates என்ற நாட்டின் பெயரில் ஆங்கில மொழிக் கோணத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்று தெரிகிறதா?



ஆங்கிலத்தில் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவ தற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்ற கேள்வியைப் பல வாசகர்கள் அவ்வப்போது எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். கீழே உள்ள வழிகளை முயற்சித்துப் பார்க்கலாம்.

ஒவ்வொரு வார்த்தையையும் அவற்றின் syllables ஆக உடைத்து ஒவ்வொரு பகுதியையும் உரத்து உச்சரியுங்கள். அப்போது silent letters-ஐயும் சேர்த்து உச்சரியுங்கள். எடுத்துக்காட்டு :- Sandwich என்பதை உச்சரிக்கும்போது ‘ஸான்விச்’ என்றுதான் கூற வேண்டும். அதாவது அந்த வார் த்தையில் ‘d’ என்பது மெளன எழுத்து. ஆனால் spelling-ஐ நினைவுகொள்வதற்காக வாய்விட்டு உச்சரித்துப் பழகும்போது sand, wich (அதாவது ஸான்ட் + விச்) என்று உச்சரித்துப்பார்க்க வேண்டும்.

Entrepreneur என்ற வார்த்தையை ‘ஆன்ட்ரப்ருனர்’ என்பது போல் உச்சரிக்க வேண்டும். என்றாலும் தொடக்கக் கட்டத்தில் என்ட்ரே+ப்ரெ+ ந்யூர் என்று சில முறை உரத்துக் கூறுங்கள்.

வேறு சில எடுத்துக்காட்டுகள் :- Wed + nes + day, Hand + ker + chief.

இதோ இன்னொரு ஆலோசனை. சில வார்த்தைகளுக்கான எழுத்துகளில் குழப்பம் ஏற்பட்டால் அது தொடர்பான வேறொரு வார்த்தையை நினைத்துப்பார்க்கலாம். அப்போது தெளிவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

தசைகளைக் குறிக்கும் ‘மஸில்’ என்ற ஆங்கில வார்த்தைக்கான எழுத்துகள் எவை என்பதில் ஒருவேளை உங்களுக்குக் குழப்பம் உண்டாவதாக வைத்துக்கொள்வோம். அதாவது musle, muscle, mucsle இந்த மூன்றில் எது சரியானது என்பதில் உங்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது என்றால் ‘மஸில்’ என்பதை அடிப்படையாகக் கொண்ட வேறொரு வார்த்தையை யோசியுங்கள். Muscular என்ற வார்த்தையின் எழுத்துகளில் உங்களுக்குத் தெளிவிருந்தால் இப்போது அதைக் கொண்டு ‘மஸில்’ என்பதை ஆங்கிலத்தில் muscle என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.

வார்த்தைக்குள் இருக்கும் சிறிய வார்த்தையை உணர்ந்தால் சில வகை எழுத்துப்பி ழைகளை நீக்க முடியும்.

Entertainment என்ற வார்த்தைக்குள் ‘Enter’ என்ற வார்த்தை இருப்பதை உணர்ந்தால் entertainment என்ற வார்த்தையைப் பிழையில்லாமல் எழுத முடியும்.

Government என்ற வார்த்தையை ‘கவர்மென்ட்’ என்போம். (’n’ என்பதை மிக மிக லேசாக உச்சரிக்க வேண்டும்). இந்த உச்சரிப்பை மனதில் கொண்டு Goverment என்று எழுதினால் அது தவறு. Government என்பதுதான் சரி. Government என்ற வார்த்தைக்குள் Govern என்ற வார்த்தை இருப்பதை மனதில் பதிந்துகொண்டால் இந்தத் தவறு நிகழாது.

ஆனால் மேற்படி உத்திகளையெல்லாம் விடத் தலைசிறந்த உத்தி என்று வேறொரு முறையைத்தான் பரிந்துரைக்கத் தோன்றுகிறது.

ஒரு புதிய வார்த்தையைப் படித்ததும், அதை வாய்விட்டு உச்சரியுங்கள். பிறகு அந்த வார்த்தையை நினைவில் இருத்தி எழுதிப்பாருங்கள். பிறகு எழுத்துப் பிழையில்லாமல் எழுதி இருக்கிறீர்களா என்பதை ஒப்பிட்டு உறுதி செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் எழுத்துப் பிழைகளை நீக்கிவிடலாம் அல்லது பெருமளவு குறைத்துக் கொள்ளலாம்.



‘கேட்டாரே ஒரு கேள்வி’ தொடர்பாக விதவிதமாக யோசித்துப் பார்த்தேன். அந்த நாட்டின் சுருக்கப் பெயரான U.A.E. என்பதை நினைவில் கொண்டபோது, மூன்றும் vowels ஆக இருப்பது புரிந்தது. மேலும் சற்று யோசித்தபோது அந்த நாட்டின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது உள்ள தனித்தன்மை பளிச்சென்று மனதில்பட்டது. அது modules, racecar, nominate போன்ற வார்த்தைகளுக்குள்ள அதே தனித்தன்மை!

“உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தபோது ஒரு வழக்கறிஞர் மற்றவரிடம், ‘Here perjury is the rule’ என்று கூறிக்கொண்டிருந்தார் (நான் சரியாகக் கேட்டேன் என்றுதான் நினைக்கிறேன்). இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்கிறார் ஒரு வாசக ந ண்பர்.

சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். அந்த வழக்கறிஞர் நாட்டு நடப்பை அங்கதமாகக் கூறியிருக்கிறார்.

Perjury என்றால் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகும் வேண்டுமென்றே பொய் கூறுவது அல்லது உண்மையை மறைப்பது.

அதாவது “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை” என்று கூறி விட்டுப் பொய் கூறுவது.

Perjuryக்கு தண்டனை உண்டு.

நீதிமன்றத்தில் (கிட்டத்தட்ட) எல்லோருமே பொய் கூறுகிறார்கள் என்பதுதான் அந்த வழக்கறிஞரின் கருத்தாக இருக்கிறது.



Ma foi என்றால் என்ன பொருள்?

இது ஒரு பிரெஞ்சு தொடர். என் நம்பிக்கை (my faith) என்று இதற்குப் பொருள். Frankly, honestly என்றும் இவற்றுக்குப் பொருள் கொள்ளலாம்.

சில நேரம் நாம் கூறுவதற்கு அழுத்தம் தருவதுபோல இதைப் பயன்படுத்துகிறார்கள். It is certainly true. Indeed, yes. இந்த வாக்கியங்களில் certainly, indeed போன்ற வார்த்தைகளின் பொருளை ma foi என்பது அளிக்கிறது. Ma foi. Pandiarajan முன்பு Ma foi என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார். அதனால் அவருக்கு அந்தப் பெயர். Ma foi என்பதை ‘ம ஃபா’ என்று உச்சரிக்க வேண்டும்.



United Arab Emirates என்ற அந்த மிக நீளமான பெயரில் ஒரு vowel, ஒரு consonant என்று மாறி மாறி இடம் பெறுகிற விந்தையை நீங்களும் கவனித்தீர்கள்தானே!

போட்டியில் கேட்டுவிட்டால்?

Our country………….. all kinds of sacrifices

a) demand

b) require

c) demands

d) will demand

e) never demanded

Our country என்ற (singular) தொடக்கத்துக்குப் பின் demand, require ஆகிய வார்த்தைகள் இடம் பெறாது. Demands அல்லது requires என்ற வடிவில் அவை இடம் பெறலாம். எனவே demand, require ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு மீதி விடைகளை ஆராய்வோம்.

Our country never demanded என்பதைத் தொடர்ந்து all kinds of sacrifices என்று வருவது சரியில்லை. Our country never demanded any kind of sacrifice என்று வேண்டுமானால் வரலாம்.

Our country demands all kinds of sacrifices. Our country will demand all kinds of sacrifices.

மேற்படி இரண்டு வாக்கியங்களும் இலக்கணப்படி தவறானவை அல்ல. ஆனால் அர்த்தத்தைக் கொண்டு யோசித்தால் முதல் வாக்கியம் மேலும் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சரியான விடை என்பது Our country demands all kinds of sacrifices.



சிப்ஸ்

# I don’t have the faintest idea என்றால்?

அது பற்றி எனக்குத் துளியும் தெரியாது.

# Everlasting என்றால்?

முடிவில்லாத. இங்கே lasting என்பது தொடர்வதைக் குறிக்கிறது. Everlasting-குக்குச் சமமான வார்த்தைகள் - eternal, endless, perpetual.

# ஒருவரை pack rat என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

வேண்டாததை எல்லாம் தன் இருப்பிடத்தில் சேமித்துவைத்திருப்பவர்.

- தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x