Last Updated : 07 Feb, 2017 10:35 AM

 

Published : 07 Feb 2017 10:35 AM
Last Updated : 07 Feb 2017 10:35 AM

ஆங்கிலம் அறிவோமே - 146: வாய்க்கு வந்த ‘உண்மைகள்

கேட்டாரே ஒரு கேள்வி

“Odd hour-ல வந்தபோதே traffic ரொம்ப ஹெவியா இருந்தது. Even hour-ல வந்திருந்தால் இன்னும் எப்படி இருந்திருக்குமோ?!” தன்னுடைய நண்பர் கூறியதாக என் நண்பர் கூறியது.



“Post-truth என்பதை சென்ற ஆண்டின் முக்கிய வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கருதியிருக்கிறது. இதன் அர்த்தத்தை எளிமையாக விளக்குங்களேன்” என்று கோரியிருக்கிறார் ஒரு வாசகர்.

Post-truth என்ற வார்த்தைகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் truth என்பது noun ஆகவும் அதை விவரிப்பதற்கு post என்பது adjective ஆகவும் நமக்குப் படலாம். ஆனால் post-truth என்பது ஒட்டுமொத்தமாகவே adjective ஆகத்தான் பயன்படுகிறது.

அது எப்படி என்று பார்ப்பதற்கு முன் post-truth என்பதற்கான அர்த்தத்தைப் பார்ப்போம். ஒரு சூழலில் மக்களிடையே ஒரு பொதுவான கருத்து உருவாகிறது. ஆனால் இந்தக் கருத்துக்கு அடிப்படை தர்க்கரீதியான அணுகுமுறை அல்ல. மாறாக உணர்வுப் பூர்வமாகவும் தனிப்பட்ட நம்பிக்கை காரணமாகவும் உருவான கருத்து. இப்படிப்பட்ட கருத்துகளைத்தான் post-truth என்கிறார்கள்.

என்றாலும் நடைமுறையில் post-truth opinion என்பதைவிட post-truth politics என்பதுதான் அதிகமாகப் பயன்படுகிறது.

Post என்றால் அஞ்சல் என்று நாம் பொருள் கொள்வதுண்டு. Post office, postal delay.

Pre என்றால் முந்தைய என்றும், post என்றால் பிந்தைய என்றும் அர்த்தம் கூறப்படுவதுண்டு. Prepoll predictions, post-mortem என்பதுபோல.

பெரும்பாலும் ‘உண்மையான உண்மைக்கும்’, ‘உணர்வு ரீதியாக பொது மக்கள் நம்புகிற உண்மைக்கும்’ வேறுபாடு உண்டு. ஆராய்ந்து தர்க்கரீதியாக யோசிப்பவர்களைவிட, தங்கள் விருப்பு, வெறுப்புக்கேற்ப ‘இதுதான் உண்மை’ என்ற முடிவில் தொடங்கி, அதற்குத் தகுந்தாற்போல் தர்க்கங்கள் கற்பித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். Post-truth!

Post-truth என்பது எப்போதுமே பொய்யானதா? அப்படியல்ல. அவை தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம், அவ்வளவுதான்.

அமெரிக்கக் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் வாய்க்கு வந்த ‘உண்மை களை எல்லாம்’ தடாலடியாகப் பேசி தொழிலாளர்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக அள்ளினார் டொனால்டு டிரம்ப். இந்தப் பேச்சுக்களை Post-truth politics என்பதில் சேர்க்கிறார்கள்.



கேட்டாரே ஒரு கேள்வி தொடர்பான விளக்கம் இது. Odd என்றால் ஒற்றைப்படை. Even என்றால் இரட்டைப்படை. 1, 3, 7, 9 போன்றவை odd numbers. 2, 4, 6, 8 போன்றவை even numbers. அதாவது இரண்டால் வகுத்தால், முழுவதும் வகுபட்டால் even number. இல்லையென்றால் odd number.

ஆனால் நண்பரின் நண்பர் பயன்படுத்திய odd என்பதன் பொருள் வேறுவிதமானது. வழக்கத்திற்கு மாறான என்று அதற்குப் பொருள் உண்டு. The whole family identified him very odd. நீண்ட நாள் கழித்து சந்திக்கும் நண்பரை நீங்கள் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள, அவர் விழித்தால் “It is odd that you did not recognize me” என்று நீங்கள் ஆதங்கத்துடன் கூறலாம்.

She is 40-odd years என்றால் 40க்கும் மேல் ஒரு சில வருடங்கள் என்று பொருள். Odd hours என்றால் என்ன? Do not call me at odd hours during the night. ‘நீங்க வெறும் தாஸா? இல்லை லார்டு லபக்தாஸா?’ என்று விவேக் தன் பேராசிரியரிடம் சந்தேகம் எழுப்புவது odd hour-ல்! எனவே ‘கேட்டாரே ஒரு கேள்வி’ நண்பர் even hour என்று குறிப்பிட்டிருக்கக் கூடாது. Peak hours என்று குறிப்பிட்டிருக்கலாம்.

Landlocked country என்றால் என்ன?

அது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடு. இலங்கை போன்ற தீவு நாடுகள் நான்கு புறமும் நீரால் சூழப்பட்டவை. Landlocked country என்றால் அதன் எந்த எல்லையிலும் கடல் கிடையாது. இதுபோன்ற நாடுகளுக்கு ஒரு பாதகம் உண்டு. கடல் வழி வணிகம் செய்ய முடியாது.உலகில் இப்போது 48 landlocked நாடுகள் உள்ளனவாம்.



குயுக்தி என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

Fallacious reasoning. அதாவது நேர்மையற்ற யுக்தி அல்லது தவறாக அர்த்தப்படுத்துதல். Perverted intelligence கொண்டவர்களுக்கு இது எளிதாகக் கைவரும்.

மேலே உள்ள புகைப்படங்களுக்குக் கீழே காந்தியும் நேருவும் கூறிய இரு வாசகங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு சோம்பலிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும் என்று கூறினால் அது குயுக்தி.

தாகூர் கவிதையிலிருந்து ஒரு மேற்கோள் இது.

“Do not pretend Be

Do not promise - Act

Do not dream Realize’’.

இதை வைத்துக் கொண்டு (கனவு காணுங்கள் என்று கூறிய) அப்துல் கலாமும், தாகூரும் நேரெதிர் கருத்துக் கொண்டவர்கள் என்று கூறினால் அது fallacious reasoning.



போட்டியில் கேட்டுவிட்டால்?

The doctor told him to lose weight quickly or pay the ________ later in life.

a)fee, b)fine, c)price, d)cost, e)amount

உடல் பருமனான ஒருவருக்கு டாக்டர் கூறும் ஆலோசனையாக அமைந்திருக்கிறது மேற்படி வாக்கியம்.

இது டாக்டருக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர் பாக இருக்க முடியாது. எந்த டாக்டரும் “உடனே எடையைக் குறையுங்க. அல்லது எனக்கான ஃபீஸை அப்புறமா கொடுங்க” என்று கூறமாட்டார்.

எனவே, fee மற்றும் amount ஆகியவை சரியான விடைகள் அல்ல.

பொருளாதாரக் கோணத்தில் cost என்பதுடன் லாபத்தைச் சேர்த்தால் கிடைப்பது price. Cost என்றால் தயாரிப்புக்காகும் செலவு. அதுவும் இங்கு பொருந்தவில்லை.

மீதமிருப்பது fine மற்றும் price. இவற்றில் “உங்கள் எடையை உடனடியாகக் குறைக்காவிட்டால் பின்னர் வாழ்க்கையில் அதற்கான விலையை அளிக்க வேண்டியிருக்கும்” என்பது அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. அந்த விலை என்பது சர்க்கரை நோய், இதய நோய் என்பதாக இருக்கலாம்.

எனவே The doctor told him to lose weight quickly or pay the price later in life என்பதுதான் சரியான விடை.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x