Last Updated : 24 Jan, 2017 10:28 AM

 

Published : 24 Jan 2017 10:28 AM
Last Updated : 24 Jan 2017 10:28 AM

ஆங்கிலம் அறிவோமே - 144: வாட்ஸ் அப் அபத்தங்களைத் திருத்தலாமா?

கேட்டாரே ஒரு கேள்வி

A person says that he has turned 60. அவர் வயது 59ஆ, 60ஆ?

Robot உச்சரிப்பு ‘ரோபோட்’டா? அல்லது ‘ரோபோ’வா?.

ஒரு காலத்தில் ரோபோட் என்று கூறியவர்களை அற்பப் பார்வை பார்த்து ‘t silent. ரோபோ என்று சொல்’ என்று திருத்தியவர்கள் உண்டு. அந்தத் திருத்தம்தான் தவறு என்று இப்போது கூறுகிறார்கள். அதாவது ‘t’ silent letter அல்லவாம்.



Stair, Stare இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Stair அல்லது stairs என்றால் மாடிப்படிகள். Stare என்றால் உற்றுப் பார்ப்பது. வேறொருவரை stare செய்யலாம். வெற்றிடத்தை stare செய்யலாம்.

இந்த இரண்டு வார்த்தைகளிலும் உள்ள எழுத்துகளை மாற்றிப் போட்டால் வரக்கூடிய வார்த்தை satire என்றால் அங்கதம், கிண்டல். குறிப்பாகப் பிறரது முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டுவது.

What goes up and down but never moves என்பதற்கான விடை மேலே குறிப்பிட்ட மூன்று வார்த்தைகளில் எது என்பது இந்நேரம் உங்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கும்.



Preposition, Proposition இரண்டும் வெவ்வேறா?

In, with, for, on போன்றவற்றைப் ப்ரிபொஸிஷன் என்போம். Proposition என்பது கருத்தை வெளிப்படுத்துகிற ஒரு வாக்கியம். அல்லது பரிந்துரைக்கப்படுகிற ஒரு திட்டம். உதாரணமாக, The research tests the validity of the proposition. This is not an acceptable proposition.



அபத்தமான விடுமுறை விண்ணப்பங்கள் என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் bossக்கு எழுதப்படும் சில விடுமுறைக் கடித வாசகங்கள் கொஞ்ச காலமாகவே வலம் வருகின்றன. அவை கீ ழே உள்ளன. நீங்கள் அவற்றைப் படித்துச் சிரித்திருப்பீர்கள். அவை எப்படி எழுதப்பட்டிருக்க வே ண்டும் என்பதையும் யோசியுங்களேன்.

1. Since I have to go to the cremation ground at 10.00 a.m. and may not return, please grant one day casual leave.

2. As I am suffering from fever, please declare one day holiday.

3. As my headache is paining, please grant me leave for the day.

4. I am not well. I am enclosed herewith the Medical Certificate.

5. Since I have to go my village to sell my land along with my wife, please sanction me one week leave.



‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான விடை, turned 60 என்றால் 60 நிறைந்துவிட்டது. When you turn 60, நீங்கள் Senior Citizens-களுக்கான சலுகைகளை அனுபவிக்க உரிமை பெற்றவராகிவிட்டதாகப் பொருள்.



‘In addition to’ என்பதற்குப் பதிலாக வேறு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்? also என்பது மட்டும்தான் ஒரே மாற்றா?

ஒரு வாசகர் கேட்டிருக்கும் இந்தக் கேள்விக்குப் பதிலாகச் சில வாக்கியங்களை விடையாக அளிக்கிறேன்.

In addition to scenic beauty, Kerala is known for its traditional values.

மேற்படி வாக்கியத்துக்குச் சில மாற்று வாக்கியங்கள் இதோ:

Kerala is well known for its scenic beauty. MOREOVER its traditional values are also famous.

Kerala is known for its scenic beauty. Its traditional values are famous TOO.

Kerala is known for its scenic beauty AS WELL AS its traditional values.



மேலே குறிப்பிட்ட விடுமுறைக் கடித வாசகங்கள் குறித்த சில விளக்கங்கள்.

1. எனக்குத் தெரிந்த ஒருவர் “Since I have to go to the cremation ground at 10.00 a.m. and may not be able to return for a considerable time, please grant me one day’s casual leave’’ என்று எழுதினால் சரியாக இருக்குமே என்றார். சரியாக இருக்காது என்று தோன்றுகிறது. முதலில் குறிக்கப்பட்ட வாக்கியத்தைவிட இது கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் இ திலும் அதே அமங்கலமான தொனி ஒலிக்கிறது. Since I have to attend a funeral என்றோ since I have to attend a cremation என்றோ வாக்கியத்தைத் தொடங்கலாம்.

2. As I am suffering from fever, please allow me a day’s leave.

3. As my head pains (அல்லது As I am having severe headache), please grant me leave for the day.

4. I am not well. I enclose the relevant Medical Certificate.

5. Since I have to go my village, with my wife, to sell my land, please sanction me one week leave.



போட்டியில் கேட்டுவிட்டால்?

The __________ of the persons was not proved and hence they were left free.

a)Sub judice

b)Quid pro quo

c)Ultra vires

d)Mala fide

e)Modus operandi

எது நிரூபிக்கப்படாததால் சில நபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்? இந்தக் கேள்விக்கான விடைதான் சரியான விடை.

சில கேள்விகளுக்கு ‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதற்கான பதிலை நான் சொல்ல முடியாது’ என்று பதிலளித்துச் சில வி.ஐ.பி.க்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, அதாவது அதற்கான தீர்ப்பு வழங்கப் பட்டிருக்காதபோது அதை sub judice என்பார்கள்.

Quid pro quo என்பதை ‘பதிலுக்குத் தருவது’ எனலாம். நான் உங்களுக்கு என் வீட்டை விற்றால் அதற்கு quid pro quo ஆக நீங்கள் குறிப்பிட்ட பணத்தைத் தர வேண்டும். இலவசமாக என் வீட்டைக் கொடுத்தால் இந்தப் பரிவர்த் தனையில் quid pro quo இல்லையென்று அர்த்தம்.

Ultra vires என்றால் அதிகாரத்தை மீறிச் செயல்படுவது. The order of the District Collector has been declared ultra vires by the court.

Modus operandi என்றால் எந்த விதத்தில் ஒரு காரியம் செயல்படுத்தப்பட்டது என்று பொருள். அதாவது செயல்முறை.

Mala fide என்றால் தவறான நோக்கத்துடன் என்று அர்த்தம். இதற்கு எதிர்ச்சொல் bona fide.

வார்த்தைகளின் பொருளை வைத்துப் பார்க்கும்போது mala fide என்பதுதான் கோடிட்ட இடத்தில் மிகவும் பொருத்தமாகப் பொருந்துகிறது.

# புத்தாண்டுக்கு வந்த free gifts-ல் நெகிழ்ச்சியை அளித்தது எது?

அது unexpected surprise ஆக இருந்தது என்பதை மட்டுமே சொல்ல முடியும். நம்புங்கள், இது honest truth.

# Quite a few என்றால்?

Quite a lot! இரண்டுமே அதிக அளவில் என்பதைத்தான் குறிக்கின்றன.

# Couchette (கொஷெட்) என்றால் என்ன அர்த்த ம்?

ரயிலில் மூன்றாம் வகுப்பு முன்பதிவுப் பெட்டிகளில் ஜன்னலோரமாக இரண்டு single இருக்கைகள் எதிரெதிராக இருக்கும். இவற்றை இணைத்து அதன்மீது படுத்துக்கொள்ள முடியும். இதுபோன்ற அமைப்பையும் அந்த அமைப்பில் உள்ள ரயில் பெட்டியையும் couchette என்பார்கள்.

# Phobia என்பதும் Fear என்பதும் ஒன்றுதானா?

Phobia என்பது fearஐத் தாண்டியது. அது irrational fear.

# Noble பரிசு என்று குறிப்பிடாமல் ஏன் Nobel பரிசு என்று பலரும் தவறாகவே குறிப்பிடுகிறார்கள்?

ஏனென்றால் அந்தப் பரிசுகள் உருவாகக் காரணமானவரின் பெற்றோர் அவருக்கு Alfred Nobel என்று ‘தவறாகப்’ பெயர் சூட்டிவிட்டார்கள்.

# Immaculate என்றால்?

மிகவும் சுத்தமாகவும் சீராகவும் இருப்பதை இப்படி வர்ணிப்பார்கள்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x