Last Updated : 10 Jan, 2017 11:00 AM

 

Published : 10 Jan 2017 11:00 AM
Last Updated : 10 Jan 2017 11:00 AM

ஆங்கிலம் அறிவோமே - 142: இத்தனை விதமான ‘கால்’ஆ?

கேட்டாரே ஒரு கேள்வி

1.) Either Ram or Raghu forgets his lunch.

2.) Either Sita or Hema forgets her lunch.

3.) Either Ram or Sita forgets __?____ lunch.



He is like a dog with two tails என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். (நாய்கள் மகிழ்ச்சியில் வாலாட்டும்)

விலங்குகள் தொடர்பான வேறு சில idioms பற்றியும் அறிந்து கொள்ளலாமே.

As blind as a bat என்றால் முழுவதுமாக பார்வை இழந்தவர் என்று அர்த்தம். பிரச்னைகளைப் புரிந்து கொள்ள மறுப்பதையும் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

Radha is blind as a bat when it comes to her son’s bad manners.

ஒருவரைப் பற்றி lounge lizard என்று குறிப்பிட்டால் பெண்களைச் சந்திப்பதற்காகவே (clubகள் போன்ற) பொது இடத்துக்குச் செல்பவ ர் என்று பொருள்.

Monkey business என்றால் நாணயமில்லாத செயல் அல்லது அநாகரீகமான நடத்தை.

Cook someone’s goose என்றால் ஒருவரின் திட்டங்களைப் பாழ் படுத்துதல் அல்லது ஒருவரின் சரிவுக்குக் காரணமாக இருத்தல் என்று பொருள்.

வழக்கறிஞர் ஒருவர் எதிரணியினரைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் “I have got enough evidences to cook your goose” எனலாம்.



Customer என்பவர் யார்? Client என்பவர் யார்?

Customer என்பவர் பொதுவாகப் பொருள்களையோ, சேவைகளையோ பிறரிடமிருந்து வாங்குபவர். சட்டப் படியும், நமது நடைமுறை வழக்கப்ப டியும் நம்மிடமிருந்து தொடர்ந்து ஒருவர் பொருளையோ, சேவைகளையோ வாங்கினால் அவர் customer.

Client என்றால் ஒருவரது தொழில்முறை ஆலோசனையை அல்லது சேவையைப் பயன்படுத்துபவர். வழக்கறிஞர், கணக்காளர், விளம் பர ஏஜன்ஸி போன்றவற்றின் சேவையைப் பயன்படுத்திக்கொள்பவர் அவர்களது client.



தொடக்கத்தில் உள்ள ‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான பதில், Either Ram or Sita forgets his/her lunch.

“Call you என்பதற்கும் Call on you என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?”

நிச்சயம் இருக்கிறது நண்பரே. “I will call you” என்று என்னிடம் நீங்கள் சொன்னால் நீங்கள் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொள்ளப்போகிறீர்கள் என்று பொருள்.

“I will call on you” என்று என்னிடம் நீங்கள் சொன்னால் என்னைப் பார்க்க நீங்கள் நேரடியாக வரப்போவதாகச் சொல்கிறீர்கள். நீண்ட நாள் ஓரிடத்தில் தங்கப்போவதாக இருந்தால் “I will call on you” என்று சொல்வதில்லை.

“I will call you back” என்று கூறினால் “இப்போது நான் நமது தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்கிறேன். பிறகு மீண்டும் தொலை பேசியில் உங்களை அழைக்கிறேன்” என்று அர்த்தம்.

Called out என்பது அவசரத்தைக் குறிக்கிறது. “I called out your help. I got worried and called out the Doctor”.

திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சியை ரத்து செய்யும்போது call off என்பதைப் பயன்படுத்துகிறோம். “We called off the trip”.



போட்டியில் கேட்டுவிட்டால்?

Jupiter is __________ planet in our solar system.

a) bigger

b) biggest

c) the biggest

d) very big

நமது சூரியக் குடும்பத்தில் வியாழன் மிகப் பெரிய கிரகம் என்ற பொருள் கொண்ட வாக்கியம் இது.

Jupiter is bigger என்ற வாக்கியம் சரியல்ல. Taller, shorter, higher, lower, bigger போன்றவை comparative adjectives. இவை இரு பொருள்களை அல்லது இரு நபர்களை ஒப்பிடும்போது மட்டுமே பயன்படுத்தப்படும். இங்கே இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்களோடு Jupiter ஒப்பிடப்படுகிறது. எனவே comparative வார்த்தை உதவாது.

நான்காவது சாய்ஸாக very big கொடுக்கப்பட்டிருக்கிறது. Jupiter is very big என்பது சரி. ஆனால் பிற கிரகங்களுடன் ஒப்பிடப்படும்போது அதுமட்டும் போதாது.

ஆக அத்தனை கிரகங்களிலும் Jupiter மிகப் பெரியது என்கிறது வாக்கியம். Best, worst, tallest, shortest, biggest, smallest போன்றவற்றை superlative என்போம். எந்த superlative வார்த்தை வந்தாலும் அதற்கு முன்னால் ‘the’ என்ற வார்த்தையையும் நிச்சயம் போட வேண்டும். எனவே Jupiter is the biggest planet in our solar system என்பதே சரி.

சிப்ஸ்

# None என்பது singularஆ அல்லது Pluralஆ?

பொதுவாக singular (A fear which none experiences). சில சமயம் plural (None of the men meet after work).

# At that point of time, at this point of time ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இவற்றின் பொருள் முறையே then, now.

# Tall என்பதன் எதிர்ச்சொல் எது? Shortஆ அல்லது Smallஆ?

Short. எறும்புகள் நமக்கு small. ஆனால் எறும்புகளிலே tall ants, short ants இருக்கக்கூடும்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x