Last Updated : 20 Sep, 2016 10:54 AM

 

Published : 20 Sep 2016 10:54 AM
Last Updated : 20 Sep 2016 10:54 AM

ஆங்கிலம் அறிவோமே - 127: இரண்டு வில்லுக்கும் வித்தியாசம் இருக்கு!

நண்பர் ஒருவர் , “Mercenary என்றால் என்ன அர்த்தம்?” எனக் கேட்டார்.

வீரத்துக்குப் பெயர்போனவர்களாக அடையாளம் காணப்பட்ட சிலரைப் பிற நாட்டு மன்னர்கள்கூடத் தங்கள் ராணுவத்தில் பயன்படுத்திக்கொண்டதாகப் பண்டைய உலக வரலாறு சொல்கிறது. அலெக்சாண்டர்கூடத் கூலிக்காகத் தங்கள் நாட்டினருடனேயே சண்டையிடத் தயாராக இருந்த வீரர்களைத் தனது ராணுவத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இவர்களைப் பொருத்தவரை ‘சொந்த நாடு, வேற்று நாடு என்பதெல்லாம் முக்கியமில்லை. எந்த அரசு எங்களுக்கு உரிய கூலி கொடுக்கிறதோ, அதன் சார்பில் போரிடத் தயார்’ என்பதே நிலைப்பாடு.

இந்த வார்த்தை adjective ஆகப் பயன்படுத்தும்போது ‘நல்லொழுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே முன்னுரிமையாகக் கொண்ட’ என்ற அர்த்தம். No doubt the British rule was brutal and mercenary.

கூலிப்படையினர் என்பதற்கும் mercenary என்று இப்போது குறிப்பிடுகிறார்கள்.



FESTAL FESTIVE FESTIVAL

Festival என்றால் திருவிழா அல்லது பண்டிகை. Festal என்றால் பண்டிகை அல்லது விருந்து ஆகியவற்றோடு தொடர்புடையது. அதாவது ஒரு கொண்டாட்டம் தொடர்பானது.

Festive என்றால் மகிழ்ச்சியான, உற்சாகமான என்று அர்த்தம். Festive mood, Festive atmosphere.



“Lie, Lay ஆ கிய இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்துவதில் எனக்குக் குழப்பம் ஏற்படுகிறதே” என்று வருத்தப்படுகிறார் ஒரு நண்பர். குழப்பம் வரவில்லை என்றால்தான் அதிசயம். இவை அப்படிப்பட்ட வார்த்தைகள்.

Lie என்றால் பொய் என்பது வேறு area. மற்றபடி படுக்கப்போடுவது, கிடக்க வைப்பது போன்ற அர்த்தத்தில் எங்கே lie, எங்கே lay என்பதில் குழப்பம் வர வாய்ப்பு உண்டு.

இதற்கு முக்கியக் காரணம் lie என்ற வார்த்தையின் past tense lay. அதே சமயம் lay என்ற தனிப்பட்ட (present tense) verbம் உண்டு.



Lay என்றால் ஒருவரையோ, ஒரு பொருளையோ கீழே கிடக்க வைத்தல்

என்று அர்த்தம். இந்த வார்த்தை past tenseல் laid என்று குறிக்கப்படுகிறது.

Please send someone to lay tiles in my house.

He has laid his cards on the table.

Lay என்பது ஒரு செயல் - அதாவது transitive verb.

Lie என்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பது. Lie என்பதற்கு ஒரு பரப்பில் படுத்த வாக்கில் இருப்பது என்று கொள்ளலாம். அதாவது to be in a horizontal position on a surface.

The ship lies in 60 meters water.

She is lying down, but feeling better.

படுத்துக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் I want to lie down

என்றுதான் சொல்ல வேண்டும். I want to lay down அல்ல.



Phil என்றால் loving என்று பொருள். Philosophy என்றால் அறிவின்மீது கொண்ட காதல். Philha rmonic என்றால் இசையின்மீது கொண்ட காதல்.

Philanderer என்றால் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர். A male flirt.



“Pictures, belongings, congratulations, acoustics, rhetorics ஆகிய வார்த்தைகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன, சொல்லுங்கள் பார்க்கலாம்?”

என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

இவை எல்லாமே non-count nouns (Non-countable nouns என்றும் Uncountable nouns என்றும்கூடச் சொல்லலாம்). அதாவது பன்மை வடிவம் இல்லாதவை ஆனால் பன்மை போலத் தோன்றுபவை.

Pictures என்ற வார்த்தையால் முதலில் எனக்குக் குழப்பம் ஏற்பட்டது உண்மை. ஆனால் படம்-படங்கள் என்ற பொருளுக்குப் பதிலாக சினிமா என்ற அர்த்தத்தில் Pictures-ஐப் பயன்படுத்தும்போது அ துவும் non-count ஆகிறது.



Do not wash the dirty l inen in public என்று உங்களைப் பார்த்து யாராவது கண்டித்தால் “நான் எந்தத் துணியையும் துவைத்துக்கொண்டிருக்கவில்லை!” என்று திகைக்க வேண்டாம். அந்தரங்க விஷயங்களைப் பொதுவில் பேசுவது, விவாதிப்பது ஆகியவற்றைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். We should not wash the dirty linen in public என்றால் குடும்ப விஷயங்களைப் பொது இடங்களில் பேசக் கூடாது என்று பொருள்.



Will என்பதற்குப் பதிலாக ‘ll என்பதைப் பயன்படுத்துகிறோம். இரண்டிற்கும் வேறுபாடு உண்டா?

முந்தைய வார்த்தையின் சுருக்கம்தான் இரண்டாவது. இந்தக் கோணத்தில் We will be late என்பதற்கு பதிலாக We’ll be late என்று குறிப்பிடுகிறோம்.

நடைமுறையில், உடனடியாக எடுக்கப்படும் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு will என்பதற்குப் பதிலாக ’ll என்பதைப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

# Here comes a petrol station. We’ll just stop and get some petrol.

# We’ll meet next week, I suppose.

எங்கு will அல்லது shall பயன்படுத்தினால் மிகவும் formal ஆக இருக்குமோ அங்கு அது informal ஆகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் ’ll பயன்படுத்தலாம்.



சிப்ஸ்

# Byre என்றால்?

பசுக்களுக்கான லாயம்.

# பேச்சு வழக்கில் “But you know a lot about computers, isn’t it?’’ என்கிறோம். இப்படி எழுதலாமா?

தவறு. You know lot about computers. Don’t you? என்பதே சரி.

# I wish I have என்று என் விருப்பத்தை வெளிப்படுத்தும் வாக்கியத்தைத் தொடங்கலாமா?

I wish I had என்று தொடங்குவதே சரி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x