Last Updated : 13 Sep, 2016 10:46 AM

 

Published : 13 Sep 2016 10:46 AM
Last Updated : 13 Sep 2016 10:46 AM

ஆங்கிலம் அறிவோமே - 126: அவருக்குக் காதளவோடிய வாய்!

சில வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்லும்போது எப்படி வேண்டுமானாலும் முன்னும் பின்னும் மாற்றிச் சொல்லுவது வழக்கமாகிவிட்டது. Concerned Department, Department concerned ஆகிய இரண்டில் எதை எப்போது பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் வேறுபாடுகள் உண்டு.

Concerned Officer என்றால் அந்த அதிகாரி ஏதோ கவலைப்பட்டுக்கொண்டிருப்பதாக அர்த்தம் வருகிறது. ஒரு ரயில் விபத்து நடந்தால், the concerned relatives and friends will ring up the Railway Station.

Department concerned என்றால் ஒரு குறிப்பிட்ட துறை. Officer concerned என்றால் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது பிரிவுக்குப் பொறுப்பாளர். “You please go to the Transport Department and meet the Officer concerned” என்றால் “போக்குவரத்துத் துறையில் உங்களுடைய தேவைகளைக் கவனிக்கும் அதிகாரியைச் சந்தியுங்கள்” என்று அர்த்தம்.

When I went to the college I met the concerned professor என்றால் கல் லூரி சென்றிருந்தபோது அக்கறை கொண்ட பேராசிரியரைச் சந்தித்தேன் என்று பொருள்.

When I went to college I met the professor concerned என்றால் கல்லூரிக்குச் சென்று துறை தொடர்பான பேராசிரியரைச் சந்தித்தேன் என்பதாகும்.

கீழே உள்ள வாக்கியத்தைப் படித்தால் வித்தியாசம் மேலும் விளங்கும்.

The concerned parents met the Principal concerned.



BENEFICENT - BENEFICIAL

Beneficent என்றாலும் beneficial என்றாலும் ஒன்றா?

இல்லை.

Beneficent என்றால் கருணையான என்று அர்த்தம். A Beneficent ruler easily wins the loyalty of his people. தாராள மனம் கொண்ட, நன்மைகளைப் புரியும் என்ற பொருளிலும் beneficent பயன்படுத்தப்படுகிறது.

Beneficial என்றால் சாதகமான, உதவிகரமான, பயனுள்ள என்று அர்த்தம். These are beneficial medicines. Fresh air is beneficial to one’s health.

“Grin என்பதன் பொருள் என்ன?”

என நண்பர் ஒருவர் கேட்கிறார்.

He gri nned என்றால் அவர் நன்றாகப் பற்கள் தெரியப் புன்னகைக்கிறார் என்று அர்த்தம். தமிழ் இலக்கியத்தில் ‘காதளவோடிய வாய்’.

‘Grin and bear it’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதற்குப் பொருள் என்னவென்றால் துரதிர்ஷ்டமோ துயரமோ உண்டாகும்போது அந்த வலியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்வது.

“வாக்கியங்களின் நடுவே actually, really என்றெல்லாம் பயன்படுத்துகிறோமே அவற்றைத் தவிர்த்துவிடலாமே” என்கிறார் ஒரு வாசகர்.

உண்மையாகவா அ ப்படி நடந்தது என்ற கேள்விக்கு ‘really’ என்பது பதிலானால் அதை எப்படித் தவிர்க்க முடியும்? ஏன் தவிர்க்க வேண்டும்?

நாம் பயன்படுத்தும் adjectives-ஐப் பலப்படுத்தும் அல்லது மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

He is an exceptionally brilliant child.

It is really an interesting story.

We are extremely grateful.

The product is incredibly cheap

இதுபோன்ற வார்த்தைகளை intensifiers என்று கூறுவதுண்டு.

மற்றபடி எதிர்மறையாக ஒன்றைத் தெரிவிக்கும்போது அந்தத் தொனியைக் கொஞ்சம் சரிக்கட்டும் விதமாக actually, necessarily, really, very போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவ துண்டு. அ தாவது எதிர்மறையாகச் சொல்வதைக் கொஞ்சம் சரிக்கட்டும் விதத்திலோ சூழலை இறுக்கமாகக் கூடாது என்பதற்காகவோ உதிர்க்கப்படும் வாக்கியங்கள். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

> Sorry, I don’t really feel like going out now.

> am not very familiar with such computers.

> His direction was not actually convincing.

Founder என்றால் நிறுவனர் என்று அர்த்தம். Founder என்பது verb ஆகவும் பயன்படுமா?

பயன்படும். Foundered என்பது வினைச் சொல்லாகப் பிரயோகிக்கப்படும்போது பெரும் அழிவைச் சந்திப்பது அல்லது மூழ்கும் நிலையில் உள்ளது என்று அர்த்தம் வருகிறது.

Ten people drowned when the boat foundered off the Ganges coast.

Flounder என்றும் ஒரு வார்த்தை உண்டு. இதோடு இதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. To flounder என்றால் தடுமாறுதல் அல்லது நிலைகுலைதல் என்று அர்த்தம்.

Without his notes he was floundering on the stage.

Founder ஆவதற்கு முந் தைய கட்டம் flounder என்று கூறலாம்.

Alter ego என்றால் ஒரே மாதிரிக் கருத்துடையவரா என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். மிகமிக நெருக்கமான, நம்பத் தகுந்த நண்பரை Alter ego என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது ‘நான்தான் அவள்(ன்). அவள்(ன்)தான் நான்’ என்பதுபோல.

Alter ego என்பதை வேறொரு அர்த்தத்திலும் பயன்படுத்துகிறார்கள். அதாவது இரட்டை வாழ்க்கை வாழ்தல். நீங்கள் இந்த மாதிரி என்று பலரும் உங்களைப் பற்றி நினைத்திருக்க, ‘உண்மையான நீங்கள்’ என்பது வேறாக இருக்கலாம். பசுத் தோல் போர்த்திய புலி (அல்லது புலித்தோல் போர்த்திய பசு)! ராபர்ட் ஸ்டீவன்சன் படைத்த ‘டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்’ இப்படித்தான்.



சிப்ஸ்

# I am a bit in a hurry என்பது சரியா?

அல்ல. I am in a bit of a hurry.

# Currant என்றால்?

களாப் பழம் என்று சொல்வோம் அல்லவா, அதையும் அந்தத் தாவரத்தின் சொந்தக்காரத் தாவரங்களையும் அவற்றின் பழங்களையும் குறிக்கும் சொல் இது.

# I am going to a picnic என்பது சரியா? I am going for a picnic என்பது சரியா?

I am going on a picnic என்பதுதான் சரி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x