Last Updated : 03 May, 2016 12:31 PM

 

Published : 03 May 2016 12:31 PM
Last Updated : 03 May 2016 12:31 PM

ஆங்கிலம் அறிவோமே - 108: பிப்ரவரி 31-ல் கொலை

“எங்களுக்குப் பிற உணர்வுகளையும் காட்டத் தெரியும் என்றாலும் malaise கதாநாயகிகளாகத்தான் எங்களைப் பார்த்தாங்க.”

சில இடங்களில் sic என்ற வார்த்தையை அடைப்புக் குறிகளில் போடுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

ஒரு பழைய நூலிலிருந்து நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள். அதில் ஒரு வார்த்தையின் எழுத்துகள் தற்காலத்தில் மாறிவிட்டன என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்தப் பழைய வார்த்தையை அப்படியே எழுதிவிட்டு அதன் அருகில் அடைப்புக் குறிக்குள் sic என்று குறிப்பிட்டால் ‘இது ஒன்றும் எழுத்துப் பிழையோ, அச்சுப் பிழையோ அல்ல. அந்தக் காலத்தில் இதை இப்படித்தான் குறிப்பிட்டார்கள்’ என்பதைத் தெரிவிக்கிறீர்கள்.

சில சமயம் வழக்கத்துக்கு மாறான ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினால் அதற்கு அருகில் அடைப்புக் குறிக்குள் sic என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். இதற்கு அர்த்தம் ‘இந்த மாறுதலை நான் வேண்டுமென்று செய்கிறேன்’ என்று அர்த்தம்.

மைக் டைசன் பற்றிய கட்டுரையில் “டைசன் பல நல்ல கருத்துகளைக் கூறுவதுண்டு. அவர் அப்படிக் கூறுவதை நாம் காதுகொடுத்துக் (sic) கேட்க வேண்டும்” என்று எழுதுவது இப்படித்தான்.

சில சமயம் கிண்டல் செய்வதற்கும் sic பயன்படுகிறது. “இந்த நூலில் 20-ம் பக்கத்தில் பிப்ரவரி 31 (sic) அன்று கொலை செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார்” என்று குறிப்பிட்டால் நீங்கள் அதிகப்படி வாக்கியத்தைத் தவிர்க்கலாம். அதாவது “பிப்ரவரியில் 31 நாட்கள் இருக்குமா?” என்ற கிண்டலை sic என்ற வார்த்தையின் மூலம் உணர்த்திவிடுகிறீர்கள்.

  

“Malaise என்றால் கெட்ட நோக்கத்துடன் என்றுதானே அர்த்தம்?” என வினவுகிறார் ஒரு வாசகர்.

அல்ல. Bona fide என்ற வார்த்தைக்கு எதிர்ச் சொல்லான Mala fide என்ற சொல்லுக்குதான் தீய எண்ணம் என்று பொருள்.

Malaise என்றால் சோக உணர்வு. Though he tried to appear enthusiastic, we all knew that he suffered from a malaise. நோய்வாய்ப்பட்டது போன்ற உணர்வு மற்றும் “என்னவோ ஒரு சங்கடம்” என்பது போன்ற உணர்வையும் malaise என்பதுண்டு.

* * * *

Phrase, clause, sentence ஆகியவற்றைப் பற்றி மிக எளிமையாக விளக்க முடியுமா please? என்று கணிசமானவர்கள் சமீபத்தில் கேட்டதால் என்னால் முடிந்தவரை கூறுகிறேன். (இது அடிப்படையை எளிமையாகக் கூறும் முயற்சிதான். இவை மூன்றையும் பற்றிய எல்லாக் கோணங்களையும் இங்கு விளக்கவில்லை).

முதலில் subject, predicate என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி ஏதோ ஒன்று குறிப்பிடப்பட்டால்தான் இந்த இரண்டுமே இருக்கும்.

I came என்பதில் I - subject. Came - predicate. The walls were painted என்பதில் The walls - subject. were painted - predicate.

Phrase என்பது ஒன்றைவிட அதிக வார்த்தைகள் கொண்டது. அந்த வார்த்தைகள் இணைந்து ஏதோ ஒரு தகவலைக் கூறுகிறது. இதில் subject இருக்காது. Verb இருக்காது.

அப்படி இருந்தாலும் அது முக்கிய noun செய்யும் செயல் தொடர்பானதாக இருக்காது.

சில எடுத்துக்காட்டுகள்:-

The lost dog, the sports car, a cool afternoon, leaving behind the children.

Clause என்பதும் ஒரு தகவலைக் கூறுவதுதான். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தையைக் கொண்டதுதான். இதுவும் முழுமையான வாக்கியம் அல்ல. என்றாலும் இதில் ஒரு subject இருக்கும். ஒரு verb இருக்கும். அந்த verb, subject என்ன செய்வது என்பதைக் குறிப்பிடும். Clause-க்கான சில எடுத்துக்காட்டுகள்.

l When the lost dog was found

l While the sports car arrived

l If you can work

Phrase என்பது clause-ன் ஒரு பகுதியாக இருக்கக் கூடும்.

Sentence என்பது ஒரு முழுமையான தகவலைத் தருவது. அதில் குறைந்தபட்சம் ஒரு clause இருக்கும்.

l Five foot shark என்பது phrase.

l When the five foot shark attacked என்பது clause.

l A five foot shark attacked என்பது ஒரு sentence.

* * * *

I prevented him from harm என்ற வாக்கியத்தை எனக்குத் தெரிந்த ஒருவர் பயன்படுத்தினார். அதாவது ஆபத்திலிருந்து தனது நண்பரைத் தடுத்திருக்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், அதைக் குறிப்பிடும்போது ‘I protected him from harm’ என்று கூற வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வித்தியாசம் விளங்கும்.

* * * *

Extempore competition-ல் தனக்கே முதலிடம் என்றான் பேரன். “பேச்சுப் போட்டியில்தானே” என்றேன். “இது அதுக்கும் மேலே” என்று ‘ஐ’ விக்ரமை நினைவுபடுத்தியபடி வெளியே சென்றுவிட்டான். “அது எப்படி?” என்று கேட்கிறார் ஒருவர்.

Oratorical competition என்றால் பேச்சுப் போட்டி. இதற்கான தலைப்பை முதலிலேயே கூறியிருப்பார்கள். முன்தயாரிப்போடு செல்லலாம். Extempore competition என்றால் தலைப்பை அப்போதுதான் கொடுப்பார்கள். உடனடியாகப் பேச வேண்டியிருக்கும். அதனால்தான் “அதுக்கும் மேலே” என்றிருக்கிறான் பேரன்.

* * * *

“Angel என்பது ஒரு பெண்தானே? He is an angel என்று குறிப்பிடக் கூடாது அல்லவா?” எனும் நண்பருக்கு என் கருத்து இதுதான்.

கிறிஸ்தவக் கதைகளில்தான் angel என்ற வார்த்தை அதிகம் காணப்படுகிறது. இறக்கைகள் கொண்ட இந்த angel கடவுளிடமிருந்து மனிதர்களுக்குப் பல்வேறு தகவல்களை எடுத்துவருவதாகச் சித்தரிக்கப்படுகிறது.

கதைகளில் angel பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டாலும், தற்காலத்தில் இரண்டு விதங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் கருணையான, உதவும் தன்மையுடைய ஒருவரை (அவர் ஆணோ, பெண்ணோ) angel என்று குறிப்பிடுகிறார்கள். Be an angel and fetch my purse. Will you?

மிகவும் அழகான மற்றும் மிகவும் சிறப்பான நடத்தை கொண்ட குழந்தையைக் குறிக்கவும் angel என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்கள். The two little angels have gone to school.

* * * *

Comics, Cartoon ஆகிய வார்த்தைகளுக்கான வேறுபாடுகளை இந்தப் பகுதியில் குறிப் பிட்டேன். இதைத் தொடர்ந்து ஒரு வாசகர் ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

Comic என்றாலும், Comical என்றாலும் ஒன்றா? இதுதான் அவர் கேள்வி. இரண்டும் adjectives ஆகப் பயன்படுத்தப்படுகின்றன.

Comic என்றால் அதன் நோக்கமே funதான். Comic story. Comic என்பது tragic என்பதன் எதிர்ச்சொல் எனவும் கொள்ளலாம்.

Comical என்றால் அதன் நோக்கம் அப்படி இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ரொம்பவும் சீரியசாக நடிப்பதாக ஒருவர் நினைத்துக்கொண்டு நடிக்க, அது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது என்றால் Comical appearance என்று அதைக் குறிப்பிடுவோம்.

கேள்வி - பதில்

இரு வாரங்களுக்கு முன்னால் கேட்டிருந்த இரண்டு rebus புதிர்களுக்கான விடைகளை அனுப்புவதில் எக்கச்சக்கமான ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார்கள் வாசகர்கள். Noongood என்பது good afternoon என்பதைச் சரியாகவே கண்டுபிடித்து அனுப்பிய வாசகர்கள் பட்டியல் இது. (கேள்விகள் வெளியான முதல் இரு நாட்களுக்குள் வந்து சேர்ந்த பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன).

1)பவானி, சேலம்

2)D.நாகராஜன், ஸ்ரீபெரும்புதூர்

3)டாக்டர் கே.விஷாலி

4)செ.நாகசாமி, அண்ணா நகர்

5)M.ராமநாதன்

6)டாக்டர் சங்கர்ராஜன், கோவில்பட்டி

7)T.தினேஷ் தனசேகரன்

8)அக்நேதா ஆரோக்கியராஜ், நெய்வேலி

9)டாக்டர் ஹபிபூர் ரஹமான்

10)ஸ்ரீதேவி

11)ரேவதி சேகர்

12)K.B.ராமகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை

13)அஜய்பாலா

14)தாமஸ் ப்ரோலின்

15)K.கார்த்திக்

16)பூர்ணிமா ஜாய்பெல், திருநெல்வேலி

17)V.சத்யராஜ்

18)R.உஷா, கோயம்பத்தூர்

19)சிவகாமி மோகன். அரக்கோணம்

20)S.ஹேமலதா, நாகப்பட்டினம்

21)பெரியசாமி ரத்தினசாமி

22)ராமச்சந்திர ராவ் ஸ்ரீனிவாசன்

23) அஜெய் முத்துராமன், காரைக்குடி

24)சகாயநாதன், பம்பரச்சுத்தி கிராமம், லால்குடி

25)V.S.பார்கவி, அந்தியூர்

26)ஸ்ரீனிவாசன் கோபிநாத், பரமக்குடி

27)ஆர்.கெளதம், விருத்தாச்சலம்

28)பாஸ்கர் ஆனந்த் நோவா, பொள்ளாச்சி

29)ஜெய கணேஷ்

30)பேர்ல் கிட்டு, நாமக்கல்

31)நவநீதகிருஷ்ணன், திருச்செங்கோடு

32)R.கதிரவன்

33)லியோ நிர்மல்

34)K.சாரங்கன்

35)N.நாகராஜன், கோயம்புத்தூர்

மற்றொரு கேள்வியான t = T என்பதற்கான விடையைத்தான் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சரியாக யூகிக்கவில்லை. = என்ற குறியீடை equal என்று மட்டுமே யோசித்திருக்கிறார்கள். Par என்பதும் equal என்ற வார்த்தையைக் குறிக்குமே.

Teaparty, Good afternoon ஆகிய இரண்டு விடைகளையும் சரியாக எழுதிய ஒரே வாசகர் G.R.சம்பத். (Small tea party என்பது மேலும் பொருந்தும் விடை).

சிப்ஸ்:

l Sham என்றால்?

பொய்த்தோற்றம், ஏமாற்று. The excuse had been a sham.

l ஒரு விளம்பரத்தில் ‘Huge fan sale’ என்று குறிப்பிட்டிருந்தார்களே!

அவர்கள் பிரம்மாண்டமான அளவில் உள்ள மின்விசிறிகளை விற்பனைக்கு வைத்திருந்தால்தான் அப்படி விளம்பரம் செய்யலாம். Huge sale of fans என்பதுதான் சரியான வாசகம்.

l மிகவும் மகிழ்ச்சி தரும் ஓர் அனுபவத்தின்போது “This is heaven” என்று கூறலாமா?

“This is heavenly” என்று கூறுங்கள்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x