Last Updated : 13 Nov, 2016 06:12 PM

 

Published : 13 Nov 2016 06:12 PM
Last Updated : 13 Nov 2016 06:12 PM

50 ஆண்டுகள், 200 திரைப்படங்களுக்குப் பிறகு ஜாக்கி சான் ‘ஒருவழியாக’ ஆஸ்கர் வென்றார்

23 ஆண்டுகளுக்கு முன்னால் ஹாலிவுட் புகழ் சில்வஸ்டர் ஸ்டாலோன் வீட்டில் ஜாக்கி சான் ஆஸ்கர் விருதை பார்த்த போது தானும் ஆஸ்கர் பெற முடிவு செய்ததாக ஜாக்கி சான் தெரிவித்தார்.

கடைசியாக ஜாக்கி சானின் விருப்பம் சனிக்கிழமையன்று நிறைவேறியது. ஆம்! அவர் கைகளில் அந்த சிறிய ஆஸ்கர் விருது பொற்சிலை! ஆஸ்கர் பொற்சிலையைப் பெற்ற ஜாக்கி சான் கூறும்போது, “திரைத்துறையில் 56 ஆண்டுகள், 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு ஒருவழியாக இப்போது என் கையில் ஆஸ்கர்” என்று நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு விருந்தில் ஜாக்கி சான் கூறினார்.

மேலும் தன்னுடைய பெற்றோருடன் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைக் கண்டு களித்த போதெல்லாம், 'இவ்வளவு திரைப்படங்களில் பணியாற்றியும் ஏன் ஆஸ்கர் என்ற அந்த உயரிய விருது உனக்குக் கிடைக்கவில்லை?’ என்று தனது தந்தை கேட்டதை நினைவு கூர்ந்தார் ஜாக்கி சான்.

தனது சொந்த ஊர் ஹாங்காங் தன்னை ‘சீனராய் இருப்பது குறித்து பெருமிதம் கொள்பவனாய்’ உருவாக்கியதற்கு புகழ்ந்ததோடு, ரசிகர்களால்தான் நான் தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறேன், இவர்களுக்காகத்தான் என் எலும்பை உடைத்துக் கொண்டு ஜன்னல்களிலிருந்து குதித்து வருகிறேன், உதைக்கிறேன், குத்துகிறேன் எல்லாம்.

'ரஷ் ஹவர்' இணை நட்சத்திரம் கிறிஸ் டக்கர், நடிகை மிச்சேல் இயோ, ஜாக்கி சானை “Jackie 'Chantastic' Chan.” என்று செல்லமாகக் குறிப்பிட்ட டாம் ஹாங்க்ஸ் ஆகியோர் ஜாக்கியை அறிமுகம் செய்தனர்.

ஹாங்க்ஸ் கூறும்போது "அகடமி விருதுகள் எப்போதும் சண்டைக்கலையையும் ஆக்சன் காமெடி திரைப்பட வகையினங்களையும் ஒதுக்கியே வந்துள்ளன, இந்நிலையில் சானின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற டென்செல் வாஷிங்டன், லுபிடா நியோங், நிகோல் கிட்மன், எம்மா ஸ்டோன், ரயான் ரேனால்ட்ஸ், ஆம்ய் ஆடம்ஸ் மற்றும் தேவ் படேல் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஜெஃப் பிரிட்ஜஸ், ஆன்டி கார்சியா, கிறிஸ்டோபர் ரீவ் மற்றும் ஜான் டிரவோல்ட்டா ஆகியோருக்கு அவர்களது திரைவாழ்வை தீர்மானிக்கும் வேடங்களை பெற்றுத் தந்த 88 வயதான ஸ்டால் மாஸ்டர், இவர்தான் காஸ்டிங் இயக்குநராக முதல் ஆஸ்கரை பெறுபவர்.1962-ம் ஆண்டு ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ படத்துக்காக எடிட்டிங்கிற்கு ஆஸ்கர் பெற்ற 90 வயதான கோட்ஸ், இவர் 50 படங்களுக்கும் மேல் எடிட்டிங் செய்துள்ளார். இவர் தனது கவுரவ ஆஸ்கர் விருதை திரைக்குப் பின்னணியில் உள்ள, அதிகம் அறிமுகம் ஆகாத ஹீரோக்களுடன் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்தார்.

பல அருமையான ஆவணப்படங்களை எடுத்த வைஸ்மேன் (86) ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x