Last Updated : 22 Jun, 2017 11:19 AM

 

Published : 22 Jun 2017 11:19 AM
Last Updated : 22 Jun 2017 11:19 AM

விவேகம் சாதனையை முறியடித்தது மெர்சல்

ட்விட்டர் தளத்தில் 'விவேகம்' ஃபர்ஸ்ட் லுக் சாதனையை, 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் முறியடித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) மாலை வெளியிடப்பட்டது. விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் (https://twitter.com/actorvijay) நேற்று மாலை 6 மணிக்கு ட்வீட் செய்யப்பட்டது.

அப்போஸ்டர் கொண்ட ட்வீட்டை, சுமார் 38,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள். இந்த ரீ-ட்வீட் என்பது 'விவேகம்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.



— Vijay (@actorvijay) >June 21, 2017

அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் 'மெர்சல்' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியீடும், தீபாவளிக்கு படத்தையும் வெளியிட 'மெர்சல்' படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x