Last Updated : 30 Aug, 2016 12:35 PM

 

Published : 30 Aug 2016 12:35 PM
Last Updated : 30 Aug 2016 12:35 PM

யு/ஏ சான்றிதழுடன் செப்.8-ல் வெளியாகிறது இருமுகன்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'இருமுகன்', செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இருமுகன்'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார்.

இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் செப்டம்பர் 2ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.

அனைத்து பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தில் எந்தவொரு இடத்திலும் கட் செய்யச் சொல்லாமல், கதைகளத்துக்காக 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து படக்குழு செப்டம்பர் 8ம் தேதி வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

'இருமுகன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் இருக்கும் விக்ரம், அதனைத் தொடர்ந்து 'சாமி 2'வில் கவனம் செலுத்த இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x