Published : 16 Apr 2015 06:41 PM
Last Updated : 16 Apr 2015 06:41 PM

மே15-ல் மாஸ், புறம்போக்கு ரிலீஸ்

சூர்யாவின் 'மாஸ்' திரைப்படமும், ஆர்யா, விஜய் சேதுபதி நடித்த 'புறம்போக்கு' திரைப்படமும் மே 15-ல் ரிலீஸ் ஆகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தள்ளது.

மே 1-ல் 'மாஸ்' வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், படத்தின் பணிகள் முடியாததால் மே 15-ல் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் தேதியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'புறம்போக்கு' திரைப்படமும் மே 15-ல் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x