Last Updated : 23 May, 2015 01:03 PM

 

Published : 23 May 2015 01:03 PM
Last Updated : 23 May 2015 01:03 PM

மே 25-ல் தூங்காவனம் ஃபர்ஸ்ட் லுக்

கமல் நடிக்கவிருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே 25ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டார் கமல். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க த்ரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மே 24ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.

"இப்படத்தின் போட்டோ ஷுட் சென்னையில் நடைபெற்றது. மே 25ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்" என்று 'தூங்காவனம்' படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

இப்படத்தின் கதைப்படி 3 நாயகிகள் இருக்கிறார்கள். த்ரிஷா முக்கிய நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார். மேலும், மனிஷா கொய்ராலாவிடம் படத்தில் கமல்ஹாசனின் மனைவி வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x