Last Updated : 25 Oct, 2016 05:53 PM

 

Published : 25 Oct 2016 05:53 PM
Last Updated : 25 Oct 2016 05:53 PM

பட்ஜெட் ரூ.2 கோடி, வசூல் ரூ.30 கோடி: தெலுங்கு பட உரிமை கெளதம் மேனன் வசம்

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பெள்ளி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பெள்ளி சூப்புலு'. தருண் பாஸ்கர் இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு விவேக் சாகர் இசையமைத்திருந்தார். தர்மாபாத் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

சுமார் ரூ.2 கோடிக்கும் குறைவான பொருட்செலவில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. ஜூலை மாதம் வெளியான இப்படத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்.

இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 'பெள்ளி சூப்புலு' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

தற்போது ரீமேக்கிற்கான நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

'பெள்ளி சூப்புலு' கதை...

சித்ராவின் வீட்டிற்கு பெண் பார்ப்பதற்காக செல்கிறார் பிரசாந்த். நிறைய முறை பெயிலாகி பிரசாந்த் படித்து, என்ன வேலை செய்வது என்ற தெரியாமல் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசை. சித்ராவுக்கு ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்பது ஆசை. ஆனால், பெண் என்பதால் அவருடைய தந்தை மறுக்கிறார். இருவரும் ஒரு அறையில் இருக்கும் போது தவறுதலாக அந்த அறை பூட்டப்படுகிறது. அந்த அறையில் இருவரும் தங்களுடைய கடந்த கால வாழ்க்கைக் குறித்து பேச ஆரம்பிக்கிறார்கள். அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் காதல் கலந்த காமெடியில் உருவான படம் தான் 'பெள்ளி சூப்புலு'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x