Last Updated : 27 Sep, 2016 05:25 PM

 

Published : 27 Sep 2016 05:25 PM
Last Updated : 27 Sep 2016 05:25 PM

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் இறுதிச்சுற்று

சுதா கொங்கராவின் இயக்கத்தில் ஆர். மாதவன் நடித்து வெளியாகிய 'இறுதிச்சுற்று' திரைப்படம் 29-வது டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடுவதற்காகத் தேர்வாகியுள்ளது.

டோக்கியோ திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்துப் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, ''டோக்கியோ திரைப்பட விழாவில் 'இறுதிச்சுற்று' திரையிடப்பட உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கெளரவம், தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 'இறுதிச்சுற்று' திரைப்படம் அக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திரையிடப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

புறக்கணிப்பின் விளிம்பில் இருக்கும் குத்துச்சண்டை பயிற்சியாளர், மீன் விற்கும் பெண்ணிடம் ஒளிந்திருக்கும் குத்துச்சண்டை திறமையைக் கண்டுபிடித்து வெளிக்கொணரும் பாத்திரத்தில் நடித்திருந்தார் ஆர்.மாதவன். தமிழில் வெளியான அதே நேரத்தில் படம் இந்தியிலும் 'சாலா கடூஸ்' என்ற பெயரில் வெளியானது.

இயக்குநர் சுதா தற்போது 'இறுதிச்சுற்று' படத்தின் தெலுங்கு மறுபதிப்பான 'குரு' படத்தில் வெங்கடேஷை வைத்து இயக்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x